நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இனி மகாவாக நடிக்கப்போவது இவங்கதானாம் (பேசாமா பழைய மகாவ போடலாம்)

0
610
rachitha
- Advertisement -

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இலிருந்து ரக்ஷிதா விலகியதை தொடர்ந்து ரசிகர்கள் பேரதிர்ச்சியில் உள்ளார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி2, சரவணன் மீனாட்சி 3 போன்ற சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து வந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-18-458x1024.jpg

இந்த தொடரில் ரக்‌ஷா, ரேஷ்மி என்று இரண்டு நடிகைகள் நடித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் கொரோனா லாக் டவுனில் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் இந்த இரண்டு நடிகைகளுமே சீரியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதுகுறித்து பேசிய ரக்‌ஷா,லாக்டௌன் அறிவிச்சதும் பெங்களூரு கிளம்பி வந்தேன். ரெண்டரை மாசம் கழிச்சு ஷூட்டிங்னு சொல்லிக் கூப்பிட்டாங்க.

- Advertisement -

அப்ப பெங்களூரு, சென்னை ரெண்டு இடத்துலயுமே பாசிட்டிவ் கேஸ்கள் அதிகமா இருந்ததால எங்க வீட்டுல ஷூட்டிங்ல கலந்துக்க வேண்டாம்னாங்க. ஸ்டேட் விட்டு ஸ்டேட் வர்றதுல இ-பாஸ் மாதிரியான் நடைமுறைகள் வேற இருந்ததால, `என்னால கலந்துக்க முடியாது’ன்னு சொன்னேன். திரும்ப முழு லாக்டௌன் முடிஞ்சு மறுபடியும் ஷூட்டிங் தொடங்கினப்ப எனக்கு எந்த அழைப்பும் வரலை என்று கூறி இருந்தார்.

Aranmanai Kili Serial Stopped Due To This Reason Surya Reveals

இவரை தொடர்ந்து தான் சரவணன் மீனாட்சி ரக்ஷிதா இந்த தொடரில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவரும் இந்த தொடரில் இருந்து விலகிவிட்டார். இதனை தொடர்ந்து ரக்ஷிதாவிற்கு பதில் யார் இந்த தொடரில் நடிக்கப்போகிறார்கள் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்த நிலையில் தற்போது அரண்மனை கிளி சீரியலில் நாயகியாக நடித்துவந்த மோனிஷா இனி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement