9 ஆண்டுகள் கழித்து ஹீரோயின் வாய்ப்பு, மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய ரஷிதா – விரைவில் NINI க்கு டாடா.

0
6067
rachitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எத்தனையோ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. சினிமாவில் தான் நான் முதல் பாகம் இரண்டாம் பாகம் என்று பார்த்திருப்போம். ஆனால், சீரியலில் பல பாகங்களை கண்ட சீரியல் என்றால் அது விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் தான். இந்த தொடர் மூலம் ரசிகர்களும் பரிட்சயமானவர் நடிகை ரக்ஷிதா.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-110-1024x508.jpg

இந்த தொடரில் எத்தனையோ சரவணன் கதாபாத்திரம் மாறினாலும் இறுதி வரை இவர் மட்டுமே மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலில் கிடைத்த புகழால் ரசிதாவிற்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. மேலும், 2015 ஆம் ஆண்டு வெளியான ‘உப்பு கருவாடு ‘ என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் ரஷிதா.

இதையும் பாருங்க : முதல்வரின் அதிரடி திட்டம் – அன்றே கணித்த அஜித். ட்ரெண்டாகும் ஹேஷ் டேக். தற்போது வைரலாகும் பாடல்.

- Advertisement -

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் டிவியின் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடர் மூலம் ரீ – என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் இருந்து ரஷித்தா விலகுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.ரஷிதாவிற்கு   கன்னடத்தில் பெரிய நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்பட்டது. இதனால் ரஷிதாவிடம் பலரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நீங்கள் சீரியலில் இருந்து விலகுகிறார்களா ‘ என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்துள்ள ரஷிதா, ஓஹோ இது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. chill பண்ணுங்க. எது நடந்தாலும் அது நல்லதுக்குத்தான் என்று பதிலளித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர் கன்னடத்தில் ‘ரங்கநாயகா’ என்ற படத்தில் மீண்டும் நாயகியாக கமிட் ஆகி இருக்கிறார். இறுதியாக கன்னடத்தில் இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘பாரிஜாதம்’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். தற்போது 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் கன்னட சினிமாவில் நடிக்க இருக்கிறார். இதனால் விரைவில் இவர் NINI தொடருக்கு டாட்டா கட்டிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

-விளம்பரம்-
Advertisement