கற்பழித்த ஒருவனை பெரியாரோடு ஒப்பிடுவதா – பேட்டியில் சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன். இதோ அந்த வீடியோ.

0
4442
selva
- Advertisement -

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. எஸ் ஜே சூர்யா, நந்திதா, ரெஜினா போன்றவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் எஸ் ஜே சூர்யா, ராமசாமி (ராம்சே) என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இளம் வயதில் இருந்தே சபல புத்தி மற்றும் சுயநலமாக இருக்கும் ராம்சே, தனது முதலாளியிடம் நல்லவன் போல நடித்து அவரது மகளை திருமணம் செய்துகொள்கிறார். உள்ளுக்குள் படு மோசமான மனிதரான ராம்சே மனைவி மற்றும் உடன் இருப்பவர்களிடம் நல்லவன் போல நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இவர்கள் குழந்தையை பார்த்துக்கொள்ள ரெஜீனா வருகிறார். அவரோ தேவாலயத்தில் வளர்ந்த பெண், மற்றவர்களுக்க்காக தனது வாழ்க்கையை வாழ்கிறார். ஒரு கட்டத்தில் எஸ் ஜே சூர்யா, ரெஜீனா மீதிருக்கும் சபலத்தில் அவரை கற்பழித்து கொன்றுவிடுகிறார். பின்னர் ஆவியாக வந்து எஸ் ஜே சூர்யாவை கொள்கிறார் ரெஜினா. இந்த படத்தில் ரெஜினா தெய்வத்தை போலவும் எஸ் ஜே சூர்யா சாத்தான் போலவும் உருவாகப்படுத்தி இருப்பார் செல்வராகவன். இப்படி ஒரு நிலையில் பிரபல சினிமா விமர்சகரான பரத்வாஜ்ஜின் பேட்டியில் செல்வராகவன் சொன்ன பதில் பெரியாரை குறிப்பிட்டு உள்ளதாக சர்ச்சை எழ்ந்துள்ளது.

- Advertisement -

இந்த பேட்டியில் பல்வேறு கேள்விகளை கேட்டிருந்த பரத்வாஜ், இறுதியாக ஒரு கேள்வியை கேட்டிருந்தார். அதில் ‘ஆயிரத்தில் ஒருவன் படம் வரும் போது அதனை பலரும் ஈழப் பிரச்சனை குறித்து பேசிய படமாக இருந்தது என்று சொன்னார்கள். அந்த வகையில் இந்த படத்தில் கடவுளுக்கு எதிராக இருக்கும் நபரை குறிப்பிட்டு தான் இந்த ராமசாமியை காண்பித்தீர்களா ? என்று கேட்டிருந்தார். அதற்கு செல்வராகவனும் ஆம் என்று பதில் அளித்தார்.

செல்வராகவன் சொன்ன இந்த பதில் தான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது தமிழ் நாட்டின் பகுத்தறிவின் தந்தையாக கருதப்படும் பெரியாரின் இயற் பெயர் ராமசாமி என்பது பலரும் அறிந்த ஒன்று தான். மேலும், பெரியார் கடுவுள் நம்பிக்கையை மறுத்து நாத்தீக கருத்துக்களை விதைத்தவர். எனவே, பெரியாரை குறிப்பிட்டு தான் செல்வராகவன் இந்த படத்தில் ராமசாமி என்று பெயர் வைத்து இருக்கிறார் என்று சர்ச்சை வெடித்துள்ளது.

-விளம்பரம்-

இதனை சமூக வலைதளத்தில் கேள்வி கேட்டுள்ள நபர் ஒருவர் ‘இதத்தான் நா படம் பாத்துட்டு வந்ததுமே சொன்னேன் படத்துல பேர் விஷயத்துல ஒரு பொலிட்டிக்கலி தப்பான ஸ்டேட்மெண்ட் இருக்குனு.. ரெஜினா கடவுள்.. அவ வந்து கொல்ற அந்த Atheist, கொலைகார, Rapist character ஆ பெரியார தெரிஞ்சே வடிவமைச்சிருக்கான்’ என்று பதிவிட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் பெரிதாகி வருவதை அறிந்த செல்வராகவன் இதுகுறித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘நண்பர்களே ! அந்த நேர் காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்.’என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement