1 லட்ச ரூபா சம்பளம்னு சொன்னாங்க ஆனா ஒருபா கொடுக்கல – நான் கடவுள் படத்தில் நடித்த நடிகரின் கண்ணீர் வீடியோ.

0
1662
Naan Kadavul SR Krishnamurthy
- Advertisement -

இயக்குனர் பாலா இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த படம் நான் கடவுள். இந்த படத்தில் ஆர்யா, பூஜா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தில் சாமியாராக மாற்றுத்திறனாளி கிருஷ்ணமூர்த்தி நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் இவரிடம் சமீபத்தில் பிரபல சேனல் பேட்டி ஒன்று எடுத்து இருந்தது. அதில் அவர் தன்னுடைய வாழ்க்கை குறித்தும், திரைப்பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதில் அவர் கூறியிருப்பது, என் பெயர் கிருஷ்ணமூர்த்தி. நான் கடவுள் படத்தில் சாமியார் வேடத்தில் நடித்து இருந்தேன். அந்த படத்தில் நடிப்பதற்காக தான் என்னை வந்து அணுகி இருந்தார்கள். நியூஸ் பேப்பரில் என்னைப் பார்த்துவிட்டு அவர்கள் என்னிடம் கேட்டார்கள். எனக்கு சினிமாவில் நடிப்பதில் விருப்பமில்லை. ஆனால், வீட்டில் உள்ளவர்கள் ஓகே என்று சொன்னதால் நான் ஏற்றுக் கொண்டேன். அந்த படத்தில் நடித்தேன். ஆனால், அந்த படத்தில் நடிப்பதற்கு எனக்கு சம்பளமே தரவில்லை. ஒரு லட்சம் ரூபாய் என்று பேசினார்கள். ஆனால், ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை ஏமாற்றிவிட்டார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : 25 வருசமா குடும்பத்த கூட பாக்காம நாய் மாதிரி ஒழைச்சேன், ஆனா இப்போ -கொடிகட்டி பரந்த சினிமா பிரபலத்தின் பரிதாப நிலை.

கிருஷ்ணமூர்த்தி அளித்த பேட்டி:

அதன்பின் எனக்கு சினிமா மீதே நம்பிக்கை இல்லை. சூட்டிங் இருக்கு என்று சொல்வார்கள். ஆனால், நம்பி சினிமா சூட்டிங்க் போனால் இல்லை என்பார்கள். அன்று முழுவதும் நம்முடைய வேலைகள் எல்லாம் கெட்டுப் போகும். சினிமா என்றாலே ஏமாற்று வேலைதான். அதனால் எனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை. அதற்கு பிறகு வந்த வாய்ப்புகளையும் நான் ஏற்கவில்லை. நாங்கள் மொத்தம் 8 பேர்கள். என்னுடன் பிறந்தவர்கள் எல்லோருமே என்னிடம் நன்றாக தான் பழகினார்கள். என்னுடைய பேரக்குழந்தைகள், மருமகன், மருமகள் எல்லோருமே என்னிடம் அன்பாக தான் பழகுகிறார்கள்.

-விளம்பரம்-

இசை குறித்து கிருஷ்ணமூர்த்தி சொன்னது:

எல்லோரும் என்னுடன் இருப்பது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே போல் நான் ஹோமியோபதி படித்திருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் பிற துறையிலும் பட்டம் வாங்கி இருக்கிறேன். எனக்கு ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும். மேலும், எனக்கு சங்கீதம் என்றால் உயிர். நான் ஐந்து வயதில் இருக்கும் போது ஒரு மேடையில் என்னையறியாமல் பாடினேன். அப்போது அந்த பாடலை கேட்டு அங்கிருந்தவர்கள் இந்த வயதில் இப்படி பாடுகிறாரே! என்று பாராட்டி எனக்கு நூறு ரூபாய் பரிசாக கொடுத்தார். அப்போது எனக்குள் ஒரு சந்தோஷம் பிறந்தது. இதுதான் நம்முடைய துறை என்று நான் நினைத்தேன். அப்படியே நான் இசையில் முயற்சி செய்தேன்.

கிருஷ்ணமூர்த்தி லட்சியம்:

இசையில் நான் இந்த அளவிற்கு உயர்ந்து நிற்பதற்கு என்னுடைய முயற்சி மட்டும் தான். பல கச்சேரிகளில் பாடி இருக்கிறேன். நான் இசைக்காக தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறேன். கலைமாமணி விருது வாங்கி இருக்கிறேன். பல கச்சேரிகளில் 50க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி இருக்கிறேன். பத்மஸ்ரீ விருதுக்காக இப்போது முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அப்துல் கலாம் ஐயா எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அப்துல்கலாம் குறித்து சொன்னது:

அவருடைய அக்னி சிறகுகள் கதையை படித்து நான் ரொம்ப இன்ஸ்பிரேஷன் ஆகி விட்டேன். அதனால் அவருக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். உடனே அவர், உங்களை சந்திக்க வேண்டும் என்று பதில் கடிதம் போட்டிருந்தார். பின் அவரை சந்தித்தேன். அவர் சாதாரணமாக அவருடைய நண்பர்களுடன் பேசுவது போல் சகஜமாக தான் என்னிடம் பேசினார். அந்த அளவிற்கு ரொம்ப தங்கமான மனிதர். ஒரு குடியரசுத் தலைவரிடம் வாழ்த்தும், பாராட்டும் கிடைத்திருந்தது எனக்கு ரொம்ப பெருமையாக சந்தோஷமாக இருந்தது என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Advertisement