பேச்சுலர் பார்ட்டியில் செம்ம ஆட்டம் போட்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை- யார் யார் இருக்காங்ன்னு பாருங்க?

0
679
- Advertisement -

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சுருதி சண்முகப்பிரியா. இவர் நாதஸ்வரம் சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த தொடர் தான் நாதஸ்வரம். இந்த தொடரை திருமுருகன் எழுதி இயக்கி நடித்தும் இருந்தார். இந்த தொடரில் பலர் நடித்து இருந்தார்கள். குடும்ப உறவுகளின் கதையை மையமாகக் கொண்டது தான் இந்த தொடர். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-
Bharathi Kannamma Serial Actress Sruthi Latest Sizzling Pose

இந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுருதி சண்முகப்பிரியா. இவர் 1993 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தவர். இவர் நாதஸ்வரம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி இருந்தார். அந்த தொடருக்குப் பின்னர் பொன்னூஞ்சல், கல்யாண பரிசு, வாணி ராணி, பொம்முகுட்டி அம்மாவுக்கு போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதேபோல இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

சுருதி சண்முகப்ரியா நடித்த சீரியல்:

மேலும், இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா தொடரில் சுருதி நடித்து இருந்தார். இந்த தொடரில் இவர் பாரதியின் அக்காவாக நடித்து இருந்தார். அதற்கு பின் இவர் மீடியாவில் இருந்து விலகி இருக்கிறார். இருந்தாலும், இவர் எப்போதும் சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். தான் அடிக்கடி எடுக்கும் புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம்.

அரவிந்த் -சுருதி சண்முகப்ரியா:

மேலும், இவருக்கு வீட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் தான் மீடியாவில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இவர் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்கிறார். சமீபத்தில் தான் இவர்களுடைய நிச்சயதார்த்தம் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது. இந்நிலையில் இன்று இவர்களுடைய திருமணம் நடைபெறுகிறது. இன்று இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

பேச்சிலர் பார்ட்டி:

அதுமட்டும் இல்லாமல் இந்த திருமண வரவேற்பில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதால் சீரியலில் இருந்து பிரேக் எடுத்திருந்தார். இந்த நிலையில் சுருதி-அரவிந்த் இருவரின் பேச்சுலர் பார்ட்டி நேற்று நடைபெற்று இருக்கிறது. இந்த பார்ட்டியில் சன்டிவி ரோஜா சீரியல் பிரபலம் பிரியங்கா, பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை காவியா, நாதஸ்வரம் பென்சி உட்பட பல சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்று இருந்தார்கள்.

வைரலாகும் பேச்சிலர் பார்ட்டி புகைப்படம்:

சூப்பராக இவர்களுடைய பேச்சிலர் பார்ட்டி கொண்டாடப்பட்டு இருந்தது. அப்போது எடுத்த புகைப்படங்களை ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் ஸ்ருதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு இவர் தொடர்ந்து சின்னத்திரையில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement