நானும் இப்படி இருந்தவள் தான். பழைய கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்த காயத்ரி.
பிரபல தமிழ் திரைபட தயாரிப்பாளர் எஸ் எஸ் சக்ரவர்த்தியின் மகன் ஜானி நடித்த "18வயசு " என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை காயத்ரி ஷங்கர். தனது பள்ளி பருவ காலத்திலேயே கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் விஜய் சேதுபதியுடன் அதிக படத்தில் நடித்த நடிகை என்று பெயர் பெற்றவர். பெங்களூரில் வளர்ந்தாலும் இவரின் பூர்விக்கம் தமிழகம் தான். இவரது தாத்தா திருச்சியை சேர்ந்தவர். 1993 ஆம் ஆண்டு பிறந்த நடிகை காயத்ரி ஷங்கர் 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "18 வயசு" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
https://www.instagram.com/p/B-8vZF8DY9v/
அதன் பின்னர் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் " என்ற படத்திலும் நடித்தார். தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், விஜய் சேதுபதியுடன் மட்டும் 5 படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் அதிக படத்தில் நடித்துள்ள ஒரே நடிகையும் இவர் தான். தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் மாமனிதன் படத்திலும் நடித்து வருகிறார்.
இதையும் பாருங்க : பிகில் படத்தை தொடர்ந்து அட்லீயின் அடுத்த படம். டீஸரே வெறித்தனமா இருக்கே.
எத்தனையோ படங்கள் நடித்தாலும் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத காணோம் படத்தில் வரும் 'ப்பா யார் டா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கு மேக்கப் போட்டிருக்கு' என்ற காட்சியில் இவரது யாராலும் மறக்க முடியாது. மேலும், இது வரை நடித்த படங்களில் இவர் கவர்ச்சியாக நடித்ததும் இல்லை. அணைத்து படங்களிலும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஆனால், அம்மணி சமீப காலமாக மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைபடங்களை வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.ஆனால் சமீப காலமாகவே இவர் எந்த புகைப்படத்தை பதிவிட்டால் நெட்டிசன்கள் கலாய்த்து வந்தார்கள் இந்த நிலையில் தனது பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தன் உடல் குறித்து கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் காயத்ரி.
இதையும் பாருங்க : அட கடவுளே, எப்படி இவ்ளோ ஸ்லிம் ஆனீங்க. ஷிவானி பதிவிட்ட பழைய புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.
அதில், அவர் குறிப்பிட்டுள்ளாதாவது, ஒரு காலத்தில் நானும் இப்படி இருந்தவள் தான் ஆனால் இந்தப் புகைப்படத்தை பதிவிட அப்போது எனக்கு தன்னம்பிக்கை கிடையாது. நான் என் உடலைப் பற்றி பாதுகாப்பற்றது என்று சொல்லும்போது நான் பைத்தியம் பிடித்தது போல் நிறைய பேர் என்னைப் பார்க்கிறார்கள். பாதுகாப்பற்ற தன்மைக்கும் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது மனதின் நிலை. மன ஆரோக்கியம் என்பது நம் காலங்களில் அதிகம் கவனிக்கப்படாத பிரச்சினைகள். நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால், நீங்கள் கண்ணாடியில் பார்த்து, உங்களிடம் தவறாக இருக்கும் விஷயங்களை மட்டுமே பார்த்தால். நீ தனியாக இல்லை. இது நம்மில் சிறந்தவர்களுக்கு நடக்கும். ஆனால் அது அப்படி இருக்க வேண்டியதில்லை.
ஒவ்வொரு வடு, மோல், ஸ்ட்ரெட்ச்மார்க் உங்கள் பயணத்தின் கதையில் ஒரு மைல்கல், ஒவ்வொரு கதையும் தனித்துவமானது. இதுதான் உங்களை உருவாக்குகிறது. அதனுடன் சமாதானம் செய்யுங்கள். அதை ஏற்றுக்கொள். அதை நேசி. தினமும் ஒரு சிறிய சுய அன்பை நம்புங்கள், நீண்ட தூரம் செல் வேண்டி இருக்கிறது.