அட கடவுளே, எப்படி இவ்ளோ ஸ்லிம் ஆனீங்க. ஷிவானி பதிவிட்ட பழைய புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.

0
10648
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் மௌனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில்களில் வெளியான சீரியல்கள் அனைத்தும் ஹிட். அந்த வரிசையில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. சரவணன் மீனாட்சி தொடருக்கு பின்னர் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது இந்த சீரியல் தான் என்று கூட சொல்லலாம்.

-விளம்பரம்-

இந்த தொடரில் நடித்து வந்த ஷிவானி அனைத்து குடும்ப ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் துவங்கிய ‘கடைக்குட்டி சிங்கம் ‘ தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ஷிவானி. ‘கடைக்குட்டி சிங்கம்’ ஒளிபரப்பாகத் தொடங்கி முழுதாக ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. அதற்குள் கதாநாயகி ஷிவானி தொடரிலிருந்து வெளியேறிஇருந்தார்.

இதையும் பாருங்க : தமிழ் நடிகை, எம் எல் ஏ. இருந்தால் என்ன? தனது தொகுதியில் தானே இறங்கி கிருமி நாசினியை தெளித்த நடிகை.

- Advertisement -

என்ன காரணமாம்? ஷிவானி தரப்பில் பேசிய போது, வெளியேறியதை மட்டும் ஒப்புக் கொண்டு ‘கொஞ்ச நாள் போகட்டும் விரிவாகப் பேசுகிறோம்’ கூறி இருந்தார்.பகல் நிலவு தொடர் முடிந்த நிலையில், அசீம் – ஷிவானி ஆகியோரை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடர் தொடங்கப்பட்டது. ஆனால் பகல் நிலவு தொடரில் ஜோடிகளை சேனல் அழுத்தம் கொடுத்து வெளியேற்றப்பட்டனர்.

அதோடு ஷிவானியை வேண்டா வெறுப்பாக நடிக்க வச்சதாலேயே, என்ன பிரச்னையோ சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே வெளியேறிட்டாங்க என்று கூறியுள்ளனர்.கடைக்குட்டி சிங்கம் தொடருக்கு பின்னர் தற்போது ஷிவானி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரெட்டை ரோஜா’ என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : உதவி செய்றத இதனால் தான் வெளியில் சொல்வது இல்லை. சந்தானத்தின் பேட்டியில் கூறியுள்ள அஜித்.

-விளம்பரம்-

சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம். அதிலும் தற்போது ஊரடங்கு என்பதால் மற்ற நடிகைகளை போல இவரும் #Throwback என்ற பெயரில் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் தற்போது இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் முன்பைவிட தற்போது படு ஸ்லிம்மாக இருக்கும் அம்மணியை கண்டு எப்படி உடலை குறைதீர்கள் என்று நெட்டிசன்கள் டிப்ஸ் கேட்டு வருகின்றனர்.

Advertisement