டிராஃபிக் விதிகளை மீறும் தெலுங்கு பிரபலங்கள் – அல்லு அர்ஜூன், ஜூனியர் NTR-ஐ தொடர்ந்து சிக்கிய நாக சைதன்யா

0
326
nagachaitanya
- Advertisement -

தொடர்ந்து டிராபிக் விதிகளை மீறும் தெலுங்கு பிரபலங்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சாலை விபத்துக்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக போக்குவரத்து விதிமுறைகளும், போக்குவரத்து அதிகாரிகளும் கவனமாக இருக்கிறார்கள். அப்படி இருந்தும் வருடத்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிறது. இதில் பெரும்பாலும் பணக்காரர்கள் இந்த விபத்துக்களை ஏற்படுத்துகிறார்கள். அதிலும் சினிமா பிரபலங்கள் பலரும் மது போதையில், கவனக்குறைவு என பல விபத்துகளை ஏற்படுத்தி இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

-விளம்பரம்-

அதிலும் போக்குவரத்து விதிகளை மீறுவது அதிகம் தெலுங்கு நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் என்று ஹைதராபாத் போலீசார் அபராதம் வசூல் செய்து உள்ள தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த நிகழ்வு சமீப காலமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நாக சைதன்யா போலீஸில் சிக்கி அபராதம் கட்டி இருக்கிறார். தெலுங்கு சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நாகசைதன்யா.

- Advertisement -

நாகசைதன்யாவின் திரைப்பயணம்:

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். நாகசைதன்யா 2009ஆம் ஆண்டு வெளிவந்த ஜோஸ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையே நாகசைதன்யா அவர்கள் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இவர்கள் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.

நாகசைதன்யா விவாகரத்து:

இவர்கள் அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்கள் விவாகரத்து குறித்து பல வதந்திகள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் இருக்கிறது. இருந்தும் இவர்கள் இருவரும் பிரிவிற்கு பிறகு தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேபோல் நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

போக்குவரத்து விதிமுறையை மீறிய நாகசைதன்யா:

இந்த நிலையில் இன்று நாகசைதன்யா போக்குவரத்து விதிமுறையை மீறியதால் போலீசில் அபராதம் கட்டி இருக்கிறார். அதுஎன்னவென்றால், கார் கண்ணாடி விதிகளை பின்பற்றாமல் நாகசைதன்யாவின் toyota vellfire காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதனை கண்டறிந்த ஹைதராபாத் போக்குவரத்து போலீசார் நாக சைதன்யாவின் காரை நிறுத்தி அவருக்கு 700 ரூபாய்க்கான அபராதம் விதித்தது. பின் அவரது காரில் ஒட்டப்பட்டிருந்த கருப்பு நிற ஸ்டிக்கர்களையும் கிழித்து எறிந்தனர்.

அபராதம் கட்டிய தெலுங்கு நடிகர்கள்:

அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்னரே போக்குவரத்து விதிகளை மீறியதாக தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர், மஞ்சு மனோஜ், நந்தாமுரி, கல்யாண ராம், இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோருக்கும் ஐதராபாத் போலீசார் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வரிசையில் தற்போது நாக சைதன்யாவும் இணைந்து இருக்கிறார் என்ற தகவல் டோலிவுட் வட்டாரத்தில் பயங்கர பேசுபொருளாக இருக்கிறது.

Advertisement