இயக்குனர் வெங்கட் பிரபுவின் மாநாடு திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், அதையும் வெங்கட்பிரபுவே இயக்க இருப்பதாகவும் உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார்.
மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். மேலும், படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் சிம்புவும், தனுஷ்கோடி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் மிரட்டி இருக்கிறார்கள். ஒரு புத்தம் புதிய வித்தியாசமான கதைக்களத்துடன் சிம்பு மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். எப்போதும் போல் இல்லாமல் வெங்கட்பிரபு ஒரு வித்தியாசமான டைம் லூப் கான்செப்ட்டை கொண்டு படமாக்கியிருக்கிறார். மேலும், திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு கொண்ட படமாக மாநாடு அமைந்திருக்கிறது.
சிம்புவின் மாநாடு படம்:
நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் மாநாடு படம் நல்ல வசூல் சாதனை செய்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அவர்கள் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். அதை தவிர பிற படங்களிலும் சிம்பு கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில் சிம்புவின் மாநாடு படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் மாநாடுபடம் வெளியாகும் போதே அதன் தெலுங்கு பதிப்பை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், சில காரணங்களால் அந்த திட்டம் தள்ளிப்போனது.
மாநாடு படம் தெலுங்கில் ரீமேக்:
அதேநேரம் மிகப்பெரிய வெற்றி பட டப்பிங்கை விட ரீமேக் ரைட்ஸ் அதிக தொகைக்கு விலை போகும் என்பதால் சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தின் தெலுங்கு பதிப்பை வெளியிட வில்லை என்று கூறப்படுகிறது. அதோடு ஏற்பட்ட சில பிரச்சனைகளை தாண்டி மாநாடு படத்தின் டப்பிங் உரிமைகளை விற்பதற்கு தடை விலகியது. அதனைத் தொடர்ந்து சுரேஷ் புரோடக்சன் மாநாடு படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறது. இது நடிகர் ராணாவின் குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கட் பிரபு அளித்த பேட்டி:
மேலும், இந்த தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யா, பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அது மட்டுமில்லாமல் படத்தில் எஸ் ஜே சூர்யா நடித்த ரோலில் ராணா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆச்சரியம் என்னவெனில் தன் முன்னாள் மனைவி சுமந்தாவை கேலி செய்த நாயகி பூஜா ஹேக்டேவுடனே தற்போது நாக சைதன்யா நடிக்க இருப்பது தான். பூஜா ஹெக்டே கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் சமந்தா குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருந்தார். அதில் ‘ எனக்கு ஒன்றும் இவர் எந்த விதத்திலும் அழகா தெரியவில்லை’ என்று பதிவிட்டிருந்தார்.
சமந்தாவை கேலி செய்த பூஜா :
நடிகை பூஜா ஹெக்டேவின் இந்த பதிவு சமந்தா ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஆனால், நடிகை பூஜா ஹெக்டே, தனது சமூக வலைதளபக்கம் ஹேக் செய்யப்பட்டது என்று கூறி இருந்தார். அதனால் அதில் வரும் பதிவுகளை கண்டு கொள்ளாதீர்கள் என்று பதிவு ஒன்றை செய்திருந்தார். இருப்பினும் சமந்தா மற்றும் பூஜா ஹெட்ஜ்ஜேவின் ரசிகர்கள் மத்தியில் பணிப்போர் நடந்து கொண்டு தான் இருந்தது. இப்படி ஒரு நிலையில் சமந்தா, பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு பூஜா ஹேக்டேவின் ‘Amazee’ என்று பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.