கூலி படத்தில் நாகர்ஜுனா- ரஜினிக்கும் அவருக்கும் இப்படி ஒரு கனக்ட் இருக்கா? லோக்கியின் சாமர்த்தியம்

0
161
- Advertisement -

ரஜினியின் கூலி படத்தில் நடிகர் நாகர்ஜுனா இணைந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது. கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘லியோ’ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருந்தார்கள். அதிரடி ஆக்சன் பாணியில் வெளிவந்த லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். இதை அடுத்து தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

- Advertisement -

கூலி படம்:

இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம், நடிகர் அமீர்கான் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த படத்தில் மலையாள நடிகர் சௌபின் சாகிர் நடிக்கிறார்.

படம் குறித்த தகவல்:

இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இவர் சமீபத்தில் வெளிவந்த மஞ்சுமேல் பாய்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கடந்த சில நாட்களாகவே படத்தில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இயக்குனர் சோசியல் மீடியாவில் அறிவித்து வருகிறார். இந்த நிலையில் கூலி படத்தில் பிரபல நடிகர் இணைந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

கூலி படத்தில் நாகர்ஜுனா:

அதாவது, இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா இணைந்து இருக்கிறார். இதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. நாகர்ஜுனாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அப்டேட்டை கூலி பட குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள். இதற்கு முன்பு ரஜினி-நாகர்ஜுனா சேர்ந்து நடித்ததே இல்லை. ஆனால், 1991 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்ற நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் சாந்தி கிராந்தி என்ற படம் வெளியாகியிருந்தது.

நாகர்ஜுனா – ரஜினி கனெக்ட்:

தமிழில் நாட்டுக்கு ஒரு தலைவன் என்ற பெயரில் ரஜினி நடிப்பில் இந்த படத்தை வெளியிட்டு இருந்தார்கள். அதேபோல் தெலுங்கில் நாகர்ஜுனா நடித்திருந்தார். இப்படி ஒரே கதையில் வெவ்வேறு மொழியில் ரஜினியும் நாகர்ஜுனாவும் நடித்திருந்தார்கள். ஆனால், முதல்முறையாக இருவரும் சேர்ந்து நடிப்பது கூலி படத்தில் தான். அதே போல் கூலிப் படத்தை பேன் இந்தியா படமாக உருவாகி வருவதால் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளில் இருந்து நடிக்கிறார்கள். இதனால் இந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement