நீண்ட வருடங்களுக்கு பின் நடிக்க வந்த நக்மா.! அதுவும் இந்த பிரபல நடிகரின் அம்மாவாக.!

0
1029
nagma
- Advertisement -

தமிழ் சினிமாவில் 90 ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக எழுந்து வந்தவர் நடிகை நக்மா இவர் பிரபல நடிகை ஜோதிகாவின் சகோதரி என்பது பலரும் அறிந்த விடயம்தான். 2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான காவலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நக்மா.

-விளம்பரம்-
nagma

அதன் பின்னர் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்து வந்தார் நக்மா. 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

- Advertisement -

இடைப்பட்ட காலத்தில் கதாநாயகியாக வாய்ப்பை இழந்த நக்மா நீண்ட இடைவெளிக்கு பின் அஜித் நடிப்பில் வெளியான ‘தீனா’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் படத்தில் ஒரு சிபிஐ அதிகாரியாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் போஜ்புரி படங்களில் கவனம் செலுத்தி வந்தார் நக்மா. சிட்டிசன் படத்திற்கு பின்னர் இதுவரை எந்த ஒரு தமிழ் படத்திலும் காண முடியவில்லை. இறுதியாக 2007 ஆம் ஆண்டு வெளியான ஒரு போஜ்பூரி படத்தில் நடித்திருந்தார்.இந்த நிலையில் 11 ஆண்டுகள் கழித்து சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் நக்மா.

-விளம்பரம்-

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தில் அவரின் அம்மாவாக நடிக்க உள்ளார் நக்மா என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை திரிவிக்ரம் இயக்கவுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நக்மா நீண்ட இடைவேளைக்கு பின்னர் சினிமாவில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது நல்ல கதை உள்ள திரைப்படங்கள் அமைந்தால் நான் நான் தமிழிலும் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்

Advertisement