அவ என்ன பத்தி பேசுனது மன்னிச்சிடுவேன், ஆனால் என் கணவர் பற்றி அவர் பேசியதும் – ஸ்ரீநிதி குறித்து நக்ஷத்திரா.

0
503
Sreenidhi
- Advertisement -

ஸ்ரீநிதிக்கு இது தான் பிரச்சனை என்று நடிகை நட்சத்திரா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நட்சத்திரா. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே கேரளாவில் தான். ஆனால், சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை வந்து விட்டார். இவர் முதன் முதலில் சினிமாவில் தான் அறிமுகமானார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயக்குமார் என்பவர் இயக்கிய ‘கிடா பூசாரி மகுடி’ என்ற படத்தில் நட்சத்திரா நடித்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராம்தேவ் நடித்திருந்தார். அதன் பின்னர் சினிமாவில் சரிவர வாய்ப்பு அமையாததால் நட்சத்திரா சீரியல் பக்கம் திரும்பினார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நட்சத்திரா நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அந்த அளவிற்கு அவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

- Advertisement -

இதையும் பாருங்க : தரங்கெட்ட, பணத்துக்காக எதையும் செய்யத்துணியும் ஒருவனை தேர்ந்தெடுத்து, தன் வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டாளே – ராஜ்கிரண் வேதனை.

நட்சத்திரா திருமணம்:

இதனைத் தொடர்ந்து இவருக்கு பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வள்ளி திருமணம் என்ற தொடரில் லீட் ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நட்சத்திராவுக்கும், விஸ்வா என்பவருக்கும் திடீர் திருமணம் நடைபெற்றது. இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இவர்களின் திடீர் திருமணத்திற்கு காரணம், நட்சத்திராவின் தாத்தா உடல் நிலை மிக மோசமாக இருந்ததால் தான் அவசர அவசரமாக இவர்களுடைய திருமணம் நடந்திருந்தது.

-விளம்பரம்-

ஸ்ரீநிதி குறித்த சர்ச்சை:

ஆனால், நட்சத்திராவின் தோழி ஸ்ரீநிதி நட்சத்திரா ஆபத்தில் இருப்பதாகவும், அவரை காப்பாற்றுங்கள் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் பல சர்ச்சை கிளப்பியிருந்தார். அதற்கு நட்சத்திராவும் பதில் கொடுத்திருந்தார். இருந்தும் ஸ்ரீநிதி, நட்சத்திரா குறித்தும், அவருடைய கணவர் குறித்தும் அவதூறாக பல விஷயங்களை பேசியிருந்தார். இந்த நிலையில் நட்சத்திரா மற்றும் அவருடைய கணவர் விஷ்வா இருவரும் சேர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்து இருக்கிறார்கள். அதில் அவர்கள் ஸ்ரீநிதி குறித்து கூறியிருந்தது, எங்களுடைய திருமணம் அவசர அவசரமாக நடந்தது உண்மைதான்.

நட்சத்திரா அளித்த பேட்டி:

என்னுடைய தாத்தா உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவர் என்னுடைய திருமணத்தை இறப்பதற்கு முன் பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அதனால் தான் யாரிடமும் எந்த தகவலுமே சொல்ல முடியவில்லை. என்னுடைய நண்பர்கள் யாரிடமும் சொல்ல முடியவில்லை. ஆனால், ஸ்ரீநிதி அப்படி பேசியதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. நானும் ஸ்ரீநிதியும் ஒன்றாக தான் இருந்தோம். நல்ல நெருங்கிய தோழி. அவளை விட்டு பிரிந்து வந்ததனாலும், அவருக்கு தெரியாமல் நடந்த திருமணத்தினால் தான் அப்படி நடந்து கொண்டார். எனக்கு எப்படி சொல்வது என்றும் புரியவில்லை. அவள் என்னை பற்றி எது பேசியிருந்தாலும் அதைப் பற்றி கவலை இல்லை.

ஸ்ரீநிதி குறித்து நட்சத்திரா சொன்னது:

என்னுடைய கணவரையும் அவருடைய குடும்பத்தையும் பற்றியும் மிக தரக்குறைவாக பேசி இருந்தார். இருந்தாலும் என்னுடைய கணவரும் அவருடைய குடும்பமும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஸ்ரீநிதி மனநிலையை புரிந்து கொண்டார்கள். என் மீது வைத்திருந்த பாசத்தினால் தான் ஸ்ரீநிதி இப்படி எல்லாம் நடந்து கொண்டார். பின் நானும் என் கணவருமே சேர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தோம். நன்றாக தான் பேசிக் கொண்டிருக்கிறார். திடீரென்று அவள் வேறு மாதிரி பேசுவது எங்களுக்கே புரியவில்லை. அவள் சரியான பிறகு இதைப் பற்றி எல்லாம் பேசிக் கொள்ளலாம் என்று தான் விட்டு விட்டோம் என்று கூறியிருந்தார்.

Advertisement