தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நளினி. இவர் ராமராஜன், கார்த்தி, மோகன் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் நிறைய பக்தி படங்களிலும் நடித்திருக்கிறார். பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியுடன் இவர் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்.
தற்போது இவர் வெள்ளி திரையில் குணச்சித்திர வேடங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று வருகிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் மோதலும் காதலும் என்ற தொடரில் நடித்து வருகிறார். இதனிடையே இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த ராமராஜனை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண், பெண் குழந்தைகள் பிறந்தது.
நளினி-ராமராஜன் காதல்:
ஒரு காலத்தில் இவர் தமிழ் சினிமா உலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார். ஒரே வருடத்தில் இவருடைய நடிப்பில் 24 படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இவர் நிற்க கூட நேரம் இல்லாமல் பிசியான நடிகையாக சுற்றிக் கொண்டிருந்தார். இப்படி இருக்கும் போதுதான் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்த ராமராஜன் நளினியை காதலித்தார். ஆரம்பத்தில் இவருடைய காதலுக்கு நளினி ஓகே சொல்லவில்லை என்றாலும் அதற்குப் பிறகு சம்மதித்தார்.
நளினி- ராமராஜன் பிரிவு:
மேலும், நளினி- ராமராஜன் காதலுக்கு நளினியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஒரு கட்டத்தில் பல எதிர்ப்புகளுக்கு மீதி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அப்போது நளினியின் அம்மா சாபமிட்டு, நீ தனியா தான் நிற்பாய் என்றெல்லாம் பேசியிருந்தார். அவருடைய சாபம் பலித்தது என்னவோ, 13 ஆண்டுகள் தான் இவர்களுடைய குடும்ப வாழ்க்கை நீடித்தது. அதற்கு பின் இருவரும் பிரிந்துவிட்டார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நளினி, எனக்கு என்னுடைய கணவர் ராமராஜனை தான் ரொம்ப பிடிக்கும்.
நளினி பேட்டி:
அவருடன் வாழ்ந்த காலம் எனக்கு பொற்காலம். நான் இப்போது தூம்புகிறேன் என்றால் அவருக்கு தெரியும். அந்தளவிற்கு என் மீது அவருக்கு பாசம் இருக்கிறது. ஏழு ஜென்மம் எடுத்தாலும் எனக்கு அவர் தான் கணவராக திரும்ப வரவேண்டும். அவருக்கு ஜோதிடம் மீது அதிக நம்பிக்கை. அதனால் குழந்தைகள் வளரும்போது அப்பா கூட இருக்க கூடாது என்று சொன்னதால் நாங்கள் விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டோம். விவாகரத்து வாங்கும் போது கூட என்னுடைய கணவர் என் கையை பிடித்து தான் இருந்தார் என்று கூறியிருக்கிறார்.
ராமராஜன் படம்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் மக்கள் நாயகன் ராமராஜன். வெறும் அரை ட்ரவுஸரில் அந்த படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்தவர். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் சாமானியன். இந்த படத்தை இயக்குனர் ராகேஷ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், போஸ் வெங்கட், கே எஸ் ரவிக்குமார் உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.