திடீரென்று நம்ம மதுரை சிஸ்டர்ஸ் சீரியல் முடிந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இது சொல்ல மறந்த கதை சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் சாதனா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து வருகிறார். இதற்கு முன்பே இவர் விஜய் டிவி, ஜீ தமிழ் என பிற சேனல் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு கலர்ஸ் தமிழ் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதனால் இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இது சொல்ல மறந்த கதை சீரியலில் கமிட்டானார். இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக சத்யா சீரியல் புகழ் அமுல் பேபி விஷ்ணு நடித்து வந்தார். சாதனா என்ற ரோலில் ரச்சிதாவின் நடிப்பு பலரின் கவனத்தையும் பெற்றது.
இது சொல்ல மறந்த கதை சீரியல்:
இதனால் பலரும் இந்த சீரியலை விரும்பி பார்க்க தொடங்கினர். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரை திடீரென்று நிறுத்த இருக்கின்றனர். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி மூலம் ரஷிதா கூறியது, ‘இது சொல்ல மறந்த கதை’ தொடரின் ‘சாதனா’ கதாபாத்திரம் இப்படி முடிவடையும் என நான் நினைக்கவில்லை. நல்ல கருத்துள்ள சீரியலை முடித்ததற்காக வாழ்த்துகள் கலர்ஸ் டிவி. நாங்கள் உங்களுடைய போலியான புரொமோஷனிலிருந்தாவது இனிமேல் ஃப்ரீயாக இருக்கலாம்.
ரஷிதா பதிவு:
உங்களிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த சீரியலில் நடிக்க வேண்டாம் என்று என்னை பார்த்து சிரித்த அனைவரையும் திட்டி இந்த சீரியலில் கமிட்டானேன். ஆனால், இன்று நான் தான் தவறான முடிவெடுத்திருக்கிறேன் என்று கலர்ஸ் தமிழ் நிரூபித்து விட்டது. வெட்கமாக இல்லையா, தயவு செய்து உங்கள் குறைகளை நடிகர்கள் மீது சொல்லாதீர்கள். நீங்கள் பண்ண வரைக்கும் போதும் நல்லா இருங்க. சாதனாவை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை நேரடியாக விமர்சித்து இருக்கிறார்.
நம்ம மதுரை சிஸ்டர்ஸ் சீரியல்:
இப்படி ரக்ஷிதா பதிவிட்ட பதிவு ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து ரசிகர்களும் கலர்ஸ் தமிழ் குறித்து விமர்சித்து கமெண்ட்ஸ்களை போட்டிருந்தார்கள். இந்த நிலையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான நம்ம மதுரை சிஸ்டர்ஸ் சீரியலும் திடீரென முடிவடைந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. நான்கு சகோதரர்களின் பாசப் போராட்டத்தை மையமாக கொண்ட கதை தான் நம்ம மதுரை சிஸ்டர்ஸ். இந்த தொடரில் மூத்த சகோதரி ஆக இந்திராணி என்ற கதாபாத்திரத்தில் சாயா சிங் நடித்து இருந்தார்.
அதிருப்தியில் ரசிகர்கள்:
திடீரென்று சாயா சிங் இந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். இருந்தும், இந்த சீரியல் நன்றாக தான் சென்று கொண்டிருக்கின்றது. இப்படி ஒரு நிலையில் சில தினங்களுக்கு முன்பு திடீரென்று இந்த சீரியலை முடித்து இருக்கிறார்கள். 166 எபிசோடுகள் தான் இந்த சீரியல் கடந்திருக்கிறது. இப்படி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்கள் திடீரென முடிக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.