பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபாலி பட வில்லன்..! நடிகை பகிரங்க குற்றச்சாட்டு.!

0
231
Nanaa

இந்தியில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான “மர்டர் ” படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. தமிழில் விஷால் நடிப்பில் வெளியான “தீராத விளையாட்டு பிள்ளை ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சியமானார். சமீபத்தில் “காலா ” படத்தில் வில்லனாக நடித்த இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றசாட்டை கூறியுள்ளார்.

theeratha-vilaiyaattu-pillai
theeratha-vilaiyaattu-pillai

ஹிந்தியில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “ஹார்ன் ஓகே ப்ளீஸ் ” என்ற படத்தில் நடித்த போது நடிகர் நானா படேகர் தம்மிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா திடுக்கிடும் குற்றச்சாட்டை வைத்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, நான் “ஹார்ன் ஓகே ப்ளீஸ் ” படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்துக்கொண்டிருக்கும் போது நடிகர் நானா படேகர் தகாதா இடங்களில் கை வைத்து தொந்தரவு செய்தார். அந்த பாடல் காட்சியில் கதாநாயகி மட்டுமே இடம்பெறகூடிய காட்சியில் அவர் வேண்டுமென்று உள்ளே நுழைந்து என்னிடம் தவராக நடந்து கொண்டார்.

kaala naana

அவரை நான் கண்டித்த போது, எனக்கு பிடித்ததை நான் செய்வேன் என்னை யாரும் தடுக்க முடியாது என்று என்னிடம் சத்தம் போட்டார், அவரை அங்கு இருந்த யாரும் தடுக்கவும் இல்லை. மேலும், இதை பற்றி நான் வெளியில் சொன்ன போது நடிகர் நானா படேகரின் ஆதரவாளர்கள் என்னை மிரட்டினார்கள். நான் காரில் சென்று கொண்டிருந்த போது என்மீது தாக்குதலை கூட நடத்தினார்கள்.

Tanushree-dutta

இவரை போன்ற ஆட்கள் எல்லாம் எப்படி பெண் சுதந்திரத்தை பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள் என்று நினைக்கும் போது தான் நகைச்சுவையாக உள்ளது. மேலும், ரஜினி. அமிதாப் போன்ற மூத்த நடிகர்கள் இவருடன் இனைந்து நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் அப்போது தான் இதோ போன்ற ,சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் என்று கூறியுள்ளார்.