நந்தன் படம் தொடர்பாக இயக்குனர் இரா. சரவணன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.
முதல் படத்திலிலேயே இவர் இயக்குனராகவும் நடிகராகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார். அதற்குப் பின் இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது சசி குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘நந்தன்’.
நந்தன் படம்:
இந்தப் படத்தை இரா. சரவணன் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே ‘உடன்பிறப்பு’ என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் , நந்தன் படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை ரா என்டர்டைன்மென்ட் தயாரித்து இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படம் குறித்த தகவல்:
படத்தில் பட்டியல் இன மக்கள் ஆதிக்க வர்கத்தை எதிர்த்து ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் போது என்னவெல்லாம் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்திருக்கிறார். இந்த படத்தை பார்த்து சீமான், சிவகார்த்திகேயன் உட்பட பல பிரபலங்கள் பாராட்டிருந்தார்கள். அதோடு பல ஊர்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களாக இருக்கும் பட்டியலின மக்களுக்கு இந்த படத்தினுடைய சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
இயக்குனர் அளித்த பேட்டி:
இதை பார்த்து ஊ.ம.த. தங்களின் பிரச்சனைகளை படகுவினர் மற்றும் பேட்டியிலும் சொல்லி இருந்தார். இந்நிலையில் நந்தன் படம் தொடர்பாக இயக்குனர் சரவணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தொகுப்பாளர், படத்தில் பாலாஜி சக்திவேல் உடைய காட்சிகள் எல்லாம் வரும்போது திருப்பி அடிக்க கூடாதா? என்று எல்லோருக்குமே எண்ணம் வந்தது. கிளைமாக்ஸில் இல் கூட அவரை ஒரு அறை விட்டிருக்கலாம் என்றெல்லாம் தோணுது என்கிறார்கள். அந்த அளவுக்கு கொடுமையும், கீழ்தரமாகவும் நடத்தி இருந்தார்கள். அவரை அடித்த மாதிரி ஏன் ஒரு காட்சி கூட வைக்கவில்லை என்று கேட்டிருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் குறித்து சொன்னது:
அதற்கு இயக்குனர், இந்தப் படத்தை எடுத்த உடனே உதயநிதி ஸ்டாலின் சாரிடம் போட்டு காண்பித்தேன். எப்போதுமே குறை சொல்வது ஈசி, அதற்கான தீர்வு கொண்டு வருவது தான் ரொம்ப கஷ்டம். அதனால்தான் அந்த படத்தை அவரிடம் போட்டு காண்பித்தேன். படத்தை பார்த்துவிட்டு நீங்கள் கேட்ட அதே கேள்விதான் அவரும் கேட்டார். அதற்கு நான், இதற்கு முந்தைய, போன ஆட்சி என்று இல்லாமல் உங்களுடைய ஆட்சியிலேயே இந்த மாதிரி நிறைய பிரச்சனைகள் இருக்கிறது என்றேன். அவர் கிளைமாக்ஸ் சப்புனு முடித்து விட்டீர்களே என்று சொன்னார். காட்சியில் நான் மாற்றி விடலாம். ஆட்சியில் மாற்ற வேண்டும். அவசியம் வந்து ஆட்சியில் இருப்பவர்கள் மாற்றுவது தான். அந்த மாதிரி பிரச்சினைகள் நிறைய இருக்கிறது அவர்கள் தான் அதற்கு தீர்வு கொண்டு வர வேண்டும் என்று கூறி இருக்கிறார்.