படுக்கைக்கு அழைத்த நபர். ஆதாரத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய புலி பட நடிகை.

0
102827
nanditha
- Advertisement -

சினிமா துறையை பொறுத்தவரை நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை வருவது வாடிக்கையான ஒரு விஷயம் தான். ஆனால், கடந்த சில காலமாக தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளுக்கும் பல்வேறு பாலியல் தொல்லைகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும் மீடு விவகாரம் தலையெடுத்த பின்னர் பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு நடந்த மற்றும் நடைபெறும் பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி விடுகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகவும் அறியப்பட்ட நடிகையான நந்திதா ஸ்வேதா சமீபத்தில் மர்ம நபர் ஒருவர் தனக்கு குறுஞ்செய்தி மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததை ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

- Advertisement -

தினேஷ் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்க்கு பிறகு விஜய்நடித்த ‘புலி’ படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” என்ற படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : விக்ரம் பிரபுவா இது ? அவரது திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க.

அதிலும் இந்த படத்தில் அந்த குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்ற வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் குமுதா என்று பிரபலமடைந்தார் நடிகை நந்திதா ஸ்வேதா. புது முக இயக்குனர் கீதா ராஜ்புட் என்பவரின் இயக்கத்தில் நடிக்கப்போகும் இவர், அந்த படத்தில் 7 வயது பையனுக்கு அம்மாவாக நடிக்க உள்ளாராம். இதற்காக தனது உடல் எடையை 8 கிலோ குறைத்துள்ளாராம்.  எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நந்திதா அடிக்கடி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவருக்கு யார் என்றே தெரியாது இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலமாக ஆபாசமாக பேசி குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளார் மேலும் அவர் அனுப்பியுள்ள குறுஞ்செய்திகளின் நந்திதா ஸ்வேதா வருமாறு மிகவும் மோசமாக பேசியுள்ளார் அந்த இளைஞர் தனக்கு அனுப்பிய ஆபாச குறுஞ்செய்திகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நடிகை நந்திதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன் அந்த நபரை கண்டுபிடித்து அவரது மற்றும் புகைப்படத்தையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisement