விக்ரம் பிரபுவா இது ? அவரது திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க.

0
88755
vikram-prabhu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வளரும் இளம் நடிகர் விக்ரம் பிரபு. அதாவது நடிப்பு திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகன் தான் நடிகர் விக்ரம் பிரபு.
நடிகர் பிரபு அவர்கள் புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இவருக்கும் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என்ற இரு பிள்ளைகள் உள்ளார்கள். விக்ரம் பிரபு 2012 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் , பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான “கும்கி” என்ற திரைப் படத்தின் வாயிலாக சினிமா உலகில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு அவர்கள் இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்கார துரை, வாகா, சத்ரியன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for vikram prabhu wedding

- Advertisement -

இவர் எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். அவரது நடிப்பில் கடந்த வருடம் பக்கா, 60 வயது மாநிறம், துப்பாக்கி முனை ஆகிய படங்கள் வெளி வந்தன. இந்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் பேசப்படவில்லை. சினிமா துறையில் நுழைந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த விக்ரம் பிரபுவுக்கு சமீப காலமாகவே இவருடைய படங்கள் எல்லாம் தொடர் தோல்விகளை கண்டு வருகின்றது. தற்போது நடிகர் விக்ரம் பிரபு அவர்கள் நல்ல கதையை தேர்வு செய்து நடிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.

தற்போது நடிகர் விக்ரம் பிரபு அவர்கள் அசுர குரு, வானம் கொட்டட்டும் ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். விக்ரம் பிரபு அவர்கள் லக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விராட் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. விக்ரம் பிரபு அவர்கள் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னால் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக இருந்துள்ளார். படத்திற்காக உடல் எடையை குறைத்து உள்ளார். தற்போது இவருடைய திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் விக்ரம் பிரபு அவர்கள் படு குண்டாக உள்ளார்.

-விளம்பரம்-
Image result for vikram prabhu wedding

அசுர குரு என்ற படத்தில் இவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். வானம் கொட்டட்டும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டின் ஆகியோரும் ஜோடிகளாக நடிக்கிறார்கள். தற்போது இந்த படங்களுக்கு பிறகு ஜே.டி. ஜெர்ரி இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு நடிக்க போவதாக பேச்சுவார்த்தை நடை பெற்று கொண்டு வருகிறது. இந்த படம் அதிரடி திகில் படமாக தயாராகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும் நடிப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1997- ஆம் ஆண்டு விக்ரம், அஜித் குமார் இணைந்து நடித்து மிக பெரிய அளவில் வெற்றி அடைந்த உல்லாசம் படத்தின் ரீமேக்காக தான் இந்த படம் தயாராகிறது என்றும் கூறப்படுகிறது. இதில் விக்ரம் வேடத்தில் விக்ரம் பிரபுவும், அஜித்குமார் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானும் நடிப்பதாக பேசப்படுகிறது. ஆனாலும், உல்லாசம் படம் ரீமேக்கா அல்லது வேறு புதிய கதையா? என்பதை படக் குழுவினர் இன்னும் வரை உறுதிப்படுத்தவில்லை.

Advertisement