தல அஜித் என்றாலே தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நபர். ரசிகர் பட்டாளத்தையும் மீறி இவருக்கு சினிமா துறையிலும் பல ரசிகர்கள் உள்ளனர். அந்த அளவிற்கு அஜித்தின் நல்ல குணம் அனைவருக்கும் பிடிக்கும்.தன்னிடம் வேலை செய்பவர்களையும் சரி, சினிமாவில் தன்னுடன் நடிப்பவர்களையும் சரி அஜித் அவ்வளவு மரியாதையாக நடத்துவார். அஜித் நடித்த சில படங்கள் மாபெரும் வெற்றியடைந்துள்ளது ஒரு சில படங்கள் தோல்வியும் அடைந்துள்ளது.
ஆனால் அஜித் ரசிகர்களை பொறுத்தவரை அவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் தான். அந்த அளவிற்க்கு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அஜித்தை அடிக்கடி சர்ச்சியான பேச்சுகளை பேசும் தினகரன் கட்சியின் முன்னாள் உறுப்பினர் நாஞ்சில் சம்பத் அஜித்தை உதைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆர். ஜே. விக்னேஷ் தொகுத்து வழங்கிவரும் நாட்டீ நைட்ஸ் என்ற நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களை அழைத்து வந்து அவர்களை நேர்காணல் செய்வார்கள். ஆனால் நிகழ்ச்சி முழுக்க காமெடியான கேள்விகலும் பதில்களும்தான் இருக்கும்.
சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற நாஞ்சில் சம்பத் அஜித் பற்றி பேசுகையில் நான் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சி ஒன்றிற்க்கு சென்றிருந்தேன் அப்போது அஜித்தின் ஒரு படத்தை பார்த்தேன்.அந்த படத்தை பார்த்த பிறகு எனக்கு அஜித்தை பார்த்தால் அவரை உதைக்க வேண்டும் என்று தோன்றியது என நகைச்சுவையாக கூறியுள்ளார்.அதற்கு ஆர். ஜே. வின்னேஷும் சிரித்துவிட்டு பின்னர் அதனை காமெடிக்காகத்தான் அவர் கூறினார் இதனால் அஜித் ரசிகர்கள் யாரும் தப்பாக நினைக்கவேண்டாம் என்று கூறினார்.