விஜய் டிவியில் ஒரு தொகுப்பாளராக இருந்து பின்னர் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்து தற்போது ஒரு தயாரிப்பாளராக அவரதராமெடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தனது கல்லூரி நண்பரான அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ள ‘கனா’ படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது ரியோ ராஜை வைத்து தனது இரண்டாவது படத்தை தயாரிக்க உள்ளார் சிவா. ‘ஸ்மைல் சேட்டை’ எனும் பெயரில் யூடியூப் ரசிகர்களை கவர்ந்து, பின்னர் பிளாக் ஷீப் என தனி சேனலை நடத்தி வருகின்றனர். கார்த்திக் வேணுகோபாலன் தான் இந்த புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
சேட்டையன் கார்த்திக் என பலரும் அறிந்த இவரது படைப்பில் உருவாகப்போகும் புதிய படத்தில் நாயகனாக சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியின் கடைசி சரவணனாக நடித்த வி.ஜே. ரியோ தான் நடிக்கிறார். நாயகியாக கன்ச்வால் ஷிரின் என்பவர் நடிக்கிறார். ‘மீசையை முறுக்கு’ படத்தை தொடர்ந்து விக்னேஷ்காந்த் இந்த படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.
இந்த படத்தில் பிளாக் ஷீப் பட்டாளமே படத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது.சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத்தும் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே அரசியல் பிரமுகரான பழ கருப்பையா அங்காடி தெரு, விஜயின் சர்கார் போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது நாஞ்சில் சம்பத்தும் சினிமாவில் நுழைந்துள்ளார்.