ஆர் ஜேவாக இருந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் ஆர் ஜே பாலாஜி. தற்போது இவர் ‘எல் கே ஜி ‘ படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் அரசியல்வாதியாக, அதிரடிப் பேச்சாளராக நமக்கு அறிமுகமான நாஞ்சில் சம்பத் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார்.
இந்தப் படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில், இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி நாஞ்சில் சம்பத் குறித்து அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டார். ‘பல ஆண்டுக்காலம் அரசியலில் இருக்கும் நாஞ்சில் சம்பத், தன் மகனின் மருத்துவப் படிப்புக்கான ஃபீஸை கட்ட முடியாமல் கஷ்டப்படுகிறார்’ என்று கூறினார்.
இதனை கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இந்த ஆர் ஜே பாலாஜி , நாஞ்சில் சம்பத் இந்த படத்தின் டப்பிங்கில் பங்கேற்ற வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் இந்த படத்தின் ட்ரைலரில் நாஞ்சில் சம்பத் பேசும் ஒரு வசனத்தை பேச டப்பிங்கில் அவரை ஆர் ஜே பாலாஜி எந்த அளவிற்கு அமர்க்களம் படுத்தியுள்ளார் என்பதை பாருங்கள்.