என்னை ஏமாற்றி தான் திருமணம் செய்தார், நாஞ்சில் விஜயன் மனைவி மரியா பேட்டி

0
612
- Advertisement -

விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனின் மனைவி தனது கணவர் ஏமாற்றி தன்னை திருமணம் செய்து கொண்டார் என்று பேட்டியில் கூறியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை பயணத்தை தொடங்கியவர் நாஞ்சில் விஜயன்.

-விளம்பரம்-

இவர் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். இதற்கென்று நாஞ்சில் விஜயனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும் இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சில படங்களில் நடித்திருக்கிறார். பின் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட ‘வள்ளி திருமணம்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்திலும் நாஞ்சில் நடித்திருந்தார்.

- Advertisement -

நாஞ்சில் திருமணம்:

அதோடு இவர் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். அதில் இவர் பதிவிடும் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே கடந்த வருடம் நாஞ்சில் விஜயன் மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இவரின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

நாஞ்சில் விஜயன்- மரியா பேட்டி:

சமீபத்தில் நாஞ்சில் விஜயன்- மரியா ஜோடி ஒரு பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார்கள். அதில் மரியா, இவர் என்னை ஏமாற்றி தான் திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்தின் போது எங்களிடம் அவரது வயதையே சொல்லவில்லை. ஆனால், இவருக்கு இப்போ அங்கிள் வயசு இருக்கும். என்னை பெண் பார்க்க வரும் போது கூட இவர் தலை, மீசை எல்லாம் வெள்ளை முடிதான். நிச்சயதார்த்தத்துக்கும் சரி, கல்யாணத்திலும் சரி, இவர் டை அடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஏமாற்றி திருமணம் செய்தார் :

கல்யாணத்திற்கு பிறகு எதார்த்தமாக ஒரு நாள் இவருக்கு எண்ணெய் வைத்து விடலாம் என்று என்னை தேய்த்தேன். தலையில் பார்த்தால் உள்ள எல்லாமே வெள்ளை முடி தான் என்று தனது கணவர் பற்றி நகைச்சுவையாக கூறியிருந்தார். அதற்கு நாஞ்சில் நான் ஏமாற்றி எல்லாம் கல்யாணம் பண்ணலைங்க. என்னோட வயசு எல்லாம் நான் மறைக்கவில்லை. ஆனால் வெள்ளை முடிக்கு டை அடித்து மட்டும் இருந்தேன் என்று மனைவிக்கு பதில் கூறியுள்ளார்.

குக் வித் கோமாளி:

சமீபத்தில் விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக அறிமுகமான நாஞ்சில் விஜயன், ஒரே வாரத்தில் தான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார். மேலும், ‘எனக்கும் விஜய் டிவிக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் பாக்ஸ் ஆபீஸ் கம்பெனி தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன்’ என்றும் விளக்கம் கூறியிருந்தார் நாஞ்சில்.

Advertisement