தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நடிகர் நெப்போலியன். இவருடைய உண்மையான பெயர் குமரேஷன் துறைசாமி. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான “புது நெல்லு புது நாத்து” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகினர். அதற்கு பின்னர் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், நெப்போலியன் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார்.

1991ஆம் ஆனது சினிமாவில் நுழைந்த நெப்போலியன் பின்னர் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பெரம்பலூர் தொகுதியில் எம்.பி யாக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு பிறகு அமைச்சராகவும் ஆனார் பின்னர் ஒரு கடத்தில் மூடுவதுமாக திரைப்படங்களில் நடிப்பை நிறுத்திய அவர் பின்னாளில் அமெரிக்காவில் 12000 சதுர அடியில் கால்பந்து மைதானம், திரையரங்கு, லிப்ட் வசதிகள் என நவீன வீட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

Advertisement

நடிகர் நெப்போலியனின் பூர்வீக வீடு திருச்சி பக்கத்தில் உள்ள லால்குடியில் உள்ளது. மேலும் அவர் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்றியுள்ள நிலையில் நெப்போலியனின் அண்ணா குருபாகரன் அவர்களிடம் சமீபத்தில் பூர்வீக வீட்டிற்குள் பேட்டி எடுக்கப்பட்டது. நெப்போலியனுக்கு மொத்தம் 5 உடன் பிறந்தவர்கள். உள்ளார் அனைவரும் வேறு வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். தாய் 1981ஆம் ஆண்டு மறைந்து விட்டார். பின்னர் தந்தை 2002ஆம் ஆண்டு மறைந்து விட்டார். இதனால் இரண்டு பேருக்கும் சேர்த்து நினைவிடம் வைக்கலாம் என்று முடிவு செய்தோம்.

ஆனால் சாதார புகைப்படத்தில் வைத்திருந்தால் பின் வரும் பிள்ளைகளுக்கு நன்றாக தெரியாது என அவர்களின் பிரவீக வீட்டையே இடித்து காட்டாமல் அங்கு அவர்களின் தாய் மற்றும் தந்தைக்கான நினைவிடம் வைத்து விட்டனர். தந்தை தீவிர சிவ பக்தர் என்பதினால் சிவ லிங்க வடிவில் கல் அமைத்து அதில் தாய் மற்றும் தந்தையின் புகைப்படங்கள் சிவலிங்கத்தின் பாதியில் கற்களால் பதியப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் தந்தை சந்தனத்தை உடல் முழுவது எப்போதும் பூசிக்கொள்வதினால் தந்தைக்கு பிடித்த சந்தன மரம், சிவனுக்கு உகந்த கருங்காலி, செம்பருத்தி பூ, சிகப்பு பூ என தன்னுடய தந்தையின் நினைவாக அங்கே வைத்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த இடத்தில் உள்ள ஒரு அறையில் நெப்போலியனின் சிறிய வயது புகைப்படங்களும் சில நியாபகர்த்த படங்களும் உள்ளன. மேலும் தன்னுடைய தந்தையின் நினைவுக்காக அவர் உபயோகப்படுத்திய எல்லா பூஜை பொருட்களும் ஒரு அறையில் வைத்து பாதுகாத்து வருகிறார். இந்த நிலையில் இந்த வீடியோ வைரலாகவே தன்னுடைய தாய் மற்றும் தந்தைக்காக நினைவிடம் கட்டிய நெப்போலியன் மற்றும் அவரது குடும்பத்தினை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர் மக்கள்.

Advertisement
Advertisement