மருத்துவமனையில் குவிந்த போலீஸ் – கேப்டனை பார்க்க சென்ற நடிகர் சங்கம். அவரின் தற்போதைய நிலை என்ன?

0
557
- Advertisement -

விஜயகாந்தின் உடல்நிலை குறித்து நாசர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். அதோடு இவர் அடிக்கடி தொடர் சிகிச்சைக்கு சென்று வருகிறார். இப்படி இருக்கும் கடந்த மாதம் விஜயகாந்த் அவர்கள் இருமல், சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சில தினங்களுக்கு முன்பு மியாட் மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். அதில், விஜயகாந்தின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், கடந்த 24 மணி நேரமாக அவருடைய உடல்நிலை சீராக இல்லை.

- Advertisement -

விஜயகாந்த் உடல்நிலை:

அவருக்கு நுரையலுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கண்ணீர் மல்க கதறி அழுது இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பலருமே கோயில்களில் விஜயகாந்த் உடல் நலம் தேறி மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனைகளையும் அபிஷேகங்களையும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

நலம் விசாரித்த திரையுலகம்:

இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களாகவே விஜயகாந்தின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. அவர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் தகவல் வந்திருக்கிறது. இதனை அடுத்து பிரபலங்கள் பலருமே விஜயகாந்தை நேரில் பார்க்க சென்றிருக்கிறார்கள். அந்த வகையில் ஆர்.கே செல்வமணி, நாசர், திரை பிரபலங்கள் பலருமே விஜயகாந்த் சந்திக்க மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்கள். பின் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நாசர் பேட்டி:

அதில் நாசர், கேப்டன் நன்றாக இருக்கிறார். நார்மலாக தான் இருக்கிறார். அவருடைய அனைத்து புலன்களுமே நன்றாக வேலை செய்கிறது. கொஞ்ச நாட்களாக வரும் செய்திகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. இதெல்லாம் வதந்திகள் தான். நாங்கள் மருத்துவமனையில் உள்ள தலைமை மருத்துவரை சந்தித்து பேசினோம். கேப்டன் திரும்பவும் வருவார், உங்களை எல்லாம் பார்ப்பார் என்று தெளிவாக சொன்னார். அதனால் தயவு செய்து மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை, வதந்திகளை நம்பாதீர்கள். ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்னால் அவர் எப்படி இருந்தாரோ அதே போல் தான் இப்போதும் இருக்கிறார்.

விஜயகாந்த் குறித்து சொன்னது:

எங்களின் கேப்டன் திரும்பி வருவார், எங்களோடு தோன்றுவார், எங்களோடு உரையாடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அவருக்கு இன்ஃபெக்சன் ஆகிவிடும் என்பதால் தான் அவரின் அருகில் நின்று பார்க்க முடியவில்லை. அவரைப் பார்ப்பது முக்கியமல்ல. என்ன செய்தி என்பதுதான் முக்கியம். அவரை சந்திக்க முடியாது என்பது மெடிக்கல் புரோட்டோகால். அவருக்கு வென்டிலேஷன் எதுவும் வைக்கவில்லை என்று கூறி இருந்தார்.

Advertisement