நாட்டாமை படத்தில் மிக்சர் சாப்பிடுபவர் யார், தற்போது அவரின் நிலை என்ன தெரியுமா ?

0
4502
mixture-mama

1994ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்தது நாட்டாமை படம். இந்த படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோரது காமெடி உச்சத்தை எட்டியது. அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் இவர்களது காமெடி.

அப்போது ஒரு சீனில் கவுண்டமணிக்கு பெண் பார்க்க செல்லும் போது, பெண்ணின் அப்பா உட்கார்ந்து மிக்ஸர் மட்டுமே சாப்பிட்டு கொண்டிருப்பார். அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார், எப்படி அந்த ரோலுக்கு செட் ஆனார் தெரியுமா.?
natamaiஅந்த படத்தின் சூட்டிங்கின் போது, பெண்ணின் அப்பா கேரக்டருக்கு சரியான ஒரு ஆளை தேடி வந்தனரானம். ஆனால், அப்போது யாரு கிடைக்கவில்லை. சரியான சமயத்தில், அந்த படத்தில் லைட் மேனாக வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் கே.எஸ் ரவிக்குமார் கண்ணில் பட்டுள்ளார். அவருக்கு லைட் சுவிட்ச் போடுவது மற்றும் ஆப் செய்வது இரண்டு மட்டுமே வேலை.

செட்டில் உட்கார்ந்து , லைட் போட்டுவிட்டு அங்கும் சும்மாதான் உட்கார்ந்திருப்பாராம். இதனால் கே.எஸ் அவரிடம் சென்று வாங்க நடிக்கலாம் எனக் கூப்பிட்டுள்ளார். எனக்கு நடிக்க தெரியாது எனக் கூறியுள்ளார் அவர். இங்கு என்ன வேலை செக்கிறீர்களோ அதே வேலை அங்கும் செய்தால் போதும் வா எனக் கூப்பிட்டு சென்றுள்ளார்.
Ks ravikumarபின்னர்தான் அந்த சீனுக்கு கணக்கச்சிதமாக செட் ஆகியுள்ளார் அவர். அது வரைக்கும் அவரை செட்டில் மாமா என்று கூப்பிட்டு வந்த பலர் அந்த சீனுக்கு பிறகு மிக்ஸர் மாமா என கூப்பிட ஆரம்பித்துவிட்டனர். மேலும், இந்த சாக்கில் ஒன்றரை கிலோ மிக்ஸரை சாப்பிட்டு விட்டாராம் மிக்ஸர் மாமா. தற்போது அந்த பணியை விட்டுவிட்டு சென்னை கே.கே நகரின் பார்க்கில் சுண்டல் பொறி கடலை விற்று வருகிறார்.