நான் தான் நாட்டாமை படத்தில் நடித்தேன்னு சொன்னப்ப யாரும் நம்பல – நாட்டாமை பட நடிகை எக்க்லூசிவ் பேட்டி.

0
116368
keerthi
- Advertisement -

தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களின் ராஜாவாக திகழ்ந்து வருபவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். 90ஸ் காலகட்டத்தில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர் கே எஸ். 1994ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்தது நாட்டாமை படம். இந்த படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோரது காமெடி உச்சத்தை எட்டியது. அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் இவர்களது காமெடி.

-விளம்பரம்-

அப்போது ஒரு சீனில் கவுண்டமணிக்கு பெண் பார்க்க செல்லும் போது, பெண்ணின் அப்பா உட்கார்ந்து மிக்ஸர் மட்டுமே சாப்பிட்டு கொண்டிருப்பார். அந்த காமெடி இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.அதே காட்சியில் வரும் பெண் பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இவர் நாட்டாமை படத்திற்கு பின்னர் லிங்கா படத்தில் கூட நடித்து இருக்கிறார். அந்த செய்தியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நம் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

- Advertisement -

அதன் பின்னர் இவரை பற்றி அறிய நாம் முற்பட்ட போது, அவரை எப்படியோ தொடர்பு கொண்டு நாம் பேசினோம். அவரின் பெயர் கீர்த்தி நாயுடு. நாட்டாமை படத்திற்கு பின்னர் கே எஸ் ரவிக்குமாரின் லிங்கா படத்தில் நடித்த போது அங்கே இருந்தவர்கள் பலரும் இவரை நாட்டாமை படத்தில் நடித்த நடிகை என்று நம்பவில்லை. பின்னர் மேக்கப் போட்டு முடித்த பின்னர் கேஎஸ் ரவிக்குமார் இவரைக் கண்டதும் இவரை அடையாளம் கண்டுகொண்டு நீங்களா என்று ஆச்சரியப்பட்டார். ஆம், அந்த அளவிற்கு இத்தனை வருடம் ஆகியும் அதே இளமையுடன் இருக்கிறார். 1976 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த இவர் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவர் பிரபலமானது என்னவோ நாட்டாமை படத்தின் மூலமாக இருக்கலாம். ஆனால், இவர் இந்து , சேதுபதி ஐபிஎஸ் , நம்ம அண்ணாச்சி, மே மாதம் என்று பல படங்களில் நடித்து உள்ளார்.

அது மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு என்று பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் மீனா, ரோஜா, ரம்பா என்று பல்வேறு முன்னணி நடிகைகளில் தோழியாக நடித்திருக்கிறார். அதேபோல நாட்டாமை படத்தில் கவுண்டமணியுடன் நடித்த அனுபவம் குறித்து பேசிய கீர்த்தி நாயுடு, கவுண்டமணி சார் மிகவும் நன்றாக பேசுவார் அவரே எனக்கு பல படங்களில் வாய்ப்பை சிபாரிசு செய்திருக்கிறார் என்று கூறினார். மேலும் 2000 ஆம் ஸ்ரீ ஹர்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் கீர்த்தி நாயுடு.

-விளம்பரம்-

அவரும் தெலுங்கில் பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ராகுல் என்ற மகன் பிறந்தார். அவருக்கு தற்போது 18 வயதாகிறது. ஆனால், இன்றும் கீர்த்தி நாயுடு அதே இளமையுடன் இருக்கிறார் என்பது ஆச்சிரியமே. ஆனால், தான் ஒரு நடிகை என்பதை விட ஒரு மகனுக்கு அம்மா மற்றும் குடும்பத்தலைவி அதையே நான் பெரிதும் விரும்புவதாக கூறிய கீர்த்தி திருமணத்திற்கு பின்னர் கூட பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும் அவ்வளவு ஏன் அனுஷ்காவின் தோழியாக கூட நடிக்க இருப்பதாகவும் கூறியிருந்தார்.

மேலும், தனக்கு சோசியல் மீடியா எல்லாம் அவ்வளவு பரிட்சயம் கிடையாது நான் பெரும்பாலும் பேட்டிகளை கூட கொடுத்தது இல்லை என்று அக்மார்க் குடும்பத்தன்த்தோடு பேசினார். இருப்பினும் தனக்கு வரும் பட வாய்ப்பை தான் மறுக்காமல் செய்து வருவதாகவும் தற்போது கூட கார்த்தி நடித்துவரும் சுல்தான் படத்தில் நடித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

Advertisement