ஹனிமூனில் பர்த் டே Celebration – மனைவிக்கு ஆங்கில முத்தம் கொடுத்து நன்றி சொன்ன நவீன். வைரல் வீடியோ.

0
422
navin
- Advertisement -

தேனிலவில் தன்னுடைய பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த மனைவிக்கு முத்தமிட்டு நன்றி சொல்லிய நவீன்-கண்மணி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் நியூஸ் ரீடர் கண்மணி. இவர் முதன் முதலில் ஜெயா டிவியில் தான் நியூஸ் ரீடராக தன்னுடைய பயணத்தைத் தொடங்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் நியூஸ்18, காவிரி போன்ற பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருந்தார்.

-விளம்பரம்-

தற்போது இவர் சன் டிவியில் நியூஸ் ரீடர் ஆக பணியாற்றி வருகிறார். இவர் அணிந்து வரும் சேலை, ஹேர் ஸ்டைலுக்கு என்றே பெண் ரசிகைகளும் உள்ளார்கள். இவருக்கு சீரியலிலும், சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், இவர் தன்னுடைய நியூஸ் கேரியரில் தான் கவனம் செலுத்துவேன், நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம். இப்படி ஒரு நிலையில் கண்மணி அவர்கள் சீரியல் நடிகர் நவீனை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்’ -ராமர் முதல், அசோக சிலை வரை அன்றும் இன்றும் – புகைப்படத்தை பதிவிட்டு பிரகாஷ் ராஜ் கேள்வி.

நவீன் பற்றிய தகவல்:

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இதயத்தை திருடாதே சீரியலின் கதாநாயகன் தான் நவீன். இவர் சின்னத்திரை வருவதற்கு முன்பே நடிகர் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்து இருந்தது இதயத்தை திருடாதே சீரியல் தான். இந்த சீரியலின் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் படை உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

நவீன்-கண்மணி திருமணம்:

மேலும், இந்த சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீனும், சகானா என்ற கதாபாத்திரத்தில் ஹிமா பிந்துவும் நடித்து இருந்தார்கள். சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிந்தது. பின் நடிகர் நவீன் செய்தி வாசிப்பாளர் கண்மணியும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள விஜயாபார்க்கில் இவர்களின் திருமண நிச்சயதார்தம் நடைபெற்று இருந்தது. அனைவரும் எதிர்பார்த்திருந்த கண்மணி- நவீன் திருமணம் ஜூன் மாதம் நடந்து முடிந்தது.

தேனிலவில் கண்மணி கொடுத்த சர்ப்ரைஸ்:

இவர்களுடைய திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள், முக்கிய சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். தற்போது நவீன் அவர்கள் கண்ட நாள் முதல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர்கள் இருவரும் சமீபத்தில் தேனிலவிற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு எடுக்கும் புகைப்படங்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

முத்தமிட்டு நன்றி சொன்ன நவீன்:

இந்நிலையில் தேனிலவு கொண்டாடி இருக்கும்போது நவீனின் பிறந்தநாள் வந்ததையடுத்து நவீனுக்கு சர்ப்ரைசாக கேக் வெட்டி கேண்டில் லைட் கொண்டாட்டத்தை கண்மணி ஏற்பாடு செய்திருக்கிறார். தன்னுடைய பிறந்த நாளில் மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்க்கு நவீன் முத்தம் கொடுத்து நன்றி தெரிவித்த வீடியோ சோசியல் மீடியாவில் பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement