‘எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்’ -ராமர் முதல், அசோக சிலை வரை அன்றும் இன்றும் – புகைப்படத்தை பதிவிட்டு பிரகாஷ் ராஜ் கேள்வி.

0
327
prakshraj
- Advertisement -

மோடியின் ஆட்சிக்கு முன், ஆட்சிக்குப்பின் இருக்கும் ராமர், அனுமன், தேசியசின்னம் ஆகிவற்றின் ஒற்றுமையை குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக கொடி கட்டி பறப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். தமிழ் சினிமாவில் பாலச்சந்தரால் ‘டூயட்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ்.

-விளம்பரம்-

பின் தனது நடிப்பால் குறுகிய நாட்களிலேயே ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் மிரட்டி இருக்கிறார். அதிலும் பிரகாஷ் ராஜ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது செல்லம் தான். அந்தளவிற்கு கில்லி படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு இவர் தன்னுடைய நடிப்புத் திறமைக்காக தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : 32 ஆண்டுக்கு முன் நடித்த படத்திலேயே சூர்யாவிற்கு பரிசாக கொடுத்த Rolexஐ அணிந்துள்ள கமல் – அட, எந்த படத்தில் பாருங்க.

பிரகாஷ் ராஜின் திரைப்பயணம்:

பெரும்பாலும் பிரகாஷ் ராஜ் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் தான் கலக்கி இருக்கிறார். அதிலும் சமீப காலமாக பிரகாஷ் ராஜ் அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அரசியலில் பிரகாஷ் ராஜ்:

அதுமட்டும் இல்லாமல் இவர் சமீப காலமாக அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக பிரகாஷ் ராஜ் போட்டியிட்டு இருந்தார். இந்தத் தேர்தலில் அவர் வெறும் 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். அந்த தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற்றது. கடந்தாண்டு நடைபெற்ற தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

சோசியல் மீடியா சர்ச்சை:

இது ஒரு பக்கமிருக்க, சமீப காலமாகவே பிரகாஷ் ராஜ் அவர்கள் சோசியல் மீடியாவில் அரசியல்வாதிகளை தாக்கியும், அரசியல் குறித்தும் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இதனால் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக பா.ஜ.கவுக்கு எதிரான கருத்துக்களை இவர் பதிவிட்டு இருக்கிறார். இந்நிலையில் மோடியின் ஆட்சி குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மேற்கூரையில் தேசியத்தை சின்னத்தை திறந்து வைத்தார்.

பிரகாஷ் ராஜ் பதிவு:

இந்த சின்னத்தை வடிவமைக்க முதலில் களிமண் மாடலிங் அதன்பிறகு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அதன்பிறகு வெண்கல வார்ப்பு எட்டு வெவ்வேறு நிலைகளில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6 மீட்டர் உயரமுள்ள இந்த சின்னத்தின் எடை 9500 கிலோ என்றும், இந்த வெண்கல சின்னத்தை தாங்கும் வகையில் 6000 கிலோ எடையுள்ள நான்கு எஃகு தூண்கள் நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மோடி ஆட்சிக்கு வரும் முன் இருந்த ராமர், அனுமன் மற்றும் தேசிய சின்னத்தின் புகைப்படத்தையும், மோடி ஆட்சிக்கு வந்த பின்பு உள்ள ராமர், அனுமன் மற்றும் தேசியத்தின் புகைப்படத்தையும் பதிவிட்டு பாராளுமன்றத்தில் வைக்கப்படும் தேசிய சின்னம் வித்தியாசமான முறையில் இருப்பதை சுட்டி காட்டி ‘நாம் எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறோம்’ என்று பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவுக்கு தற்போது ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றது.

Advertisement