‘முயற்சி செய்து செய்து எங்கள் கனவு நிறைவேறிடுச்சி’ – நவீன் கண்மணி துவங்கிய புதிய தொழில்.

0
487
navin
- Advertisement -

நவீன்- கண்மணி இருவரும் சேர்ந்து புதிதாக தொழில் தொடங்கியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் நியூஸ் ரீடர் கண்மணி. இவர் முதன் முதலில் ஜெயா டிவியில் தான் நியூஸ் ரீடராக தன்னுடைய பயணத்தைத் தொடங்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் நியூஸ்18, காவிரி போன்ற பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருந்தார்.தற்போது இவர் சன் டிவியில் நியூஸ் ரீடர் ஆக பணியாற்றி வருகிறார். இவர் அணிந்து வரும் சேலை, ஹேர் ஸ்டைலுக்கு என்றே பெண் ரசிகைகள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இவருக்கு சீரியலிலும், சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், இவர் தன்னுடைய நியூஸ் கேரியரில் தான் கவனம் செலுத்துவேன், நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம். இப்படி ஒரு நிலையில் கண்மணி அவர்கள் சீரியல் நடிகர் நவீனை திருமணம் செய்து இருக்கிறார். அதாவது, கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இதயத்தை திருடாதே சீரியலின் கதாநாயகன் தான் நவீன். இவர் சின்னத்திரை வருவதற்கு முன்பே பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

நவீன் பற்றிய தகவல்:

இருந்தாலும், இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்து இருந்தது இதயத்தை திருடாதே சீரியல் தான். இந்த சீரியலின் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் படை உருவாகி இருக்கிறது. கடந்த ஆண்டு தான் இந்த சீரியல் முடிந்தது. அதன் பின் இவர் கண்ட நாள் முதல் என்ற சீரியலில் நடித்தார். சமீபத்தில் தான் இந்த சீரியலும் முடிந்தது. இதனிடையே நடிகர் நவீன், செய்தி வாசிப்பாளர் கண்மணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள், முக்கிய சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

கண்மணி கர்ப்பம் :

மேலும், நவீன் – கண்மணி இருவரும் தனியாக யூடியூப் சென்று தொடங்கி இருக்கிறார்கள். அதில் அவர் வெளியிடும் வீடியோ எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தான் கண்மணி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது 9 மதங்களை நிறைவு செய்து இருக்கும் கண்மணிக்கு வீட்டிலேயே எளிமையாக வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

புதிய தொழில் தொடங்கிய நவீன்:

அதற்கான புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நவீன் மற்றும் கண்மணி இருவரும் புதிதாக தொடங்கியிருக்கும் தொழில் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதாவது, நவீன் மற்றும் கண்மணி இருவரும் இணைந்து கொட்ட காஃபி என்ற பெயரில் காபி மற்றும் டீப் ஷாப் ஒன்றை தொடங்கி இருக்கிறார்கள். இந்த ஷாப்பை திறப்பதற்கு இரண்டு ஆண்டுகளாக போராடி இருந்ததாகவும், இதுதான் தங்களுடைய வாழ்க்கையில் ஆரம்பித்த முதல் தொழில் என்றும் சமீபத்தில் நவீன் கூறியிருந்தார்.

வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்:

மேலும், இவர்களுடைய காபி ஷாப் பட்டினப்பாக்கம் கடற்கரை அருகில் இருக்கிறது. இந்த கடை திறந்த முதல் நாள் அன்று ஒரு ரூபாயில் டீ என்று அறிவித்திருந்தார்கள். மேலும், நவீன் புதிதாக தொழில் தொடங்கியிருப்பதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இவர்களுடைய புதிய கடை தொடங்கிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement