கோலாகலமாக முடிந்த கண்மணி-நவீன் திருமணம், வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படம்

0
288
Navin
- Advertisement -

கோலாகலமாக நடந்து முடிந்த நவீன் – கண்மணி திருமண புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் நியூஸ் ரீடர் கண்மணி. இவர் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு மீடியாவில் தன்னுடைய கேரியரை தொடங்கினார். இவர் முதன் முதலில் ஜெயா டிவியில் தான் நியூஸ் ரீடராக தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதனை தொடர்ந்து இவர் நியூஸ்18, காவிரி போன்ற தொடர்ந்து தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருந்தார்.

-விளம்பரம்-

தற்போது இவர் சன் டிவியில் நியூஸ் ரீடர் ஆக பணியாற்றி வருகிறார். இவர் அணிந்து வரும் சேலை, ஹேர் ஸ்டைலுக்கு என்றே பெண் ரசிகைகளும் உள்ளார்கள். இதன் மூலம் இவருக்கு சீரியலிலும், சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், இவர் தன்னுடைய நியூஸ் கேரியரில் தான் கவனம் செலுத்துவேன், நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம். பின் கண்மணி அவர்கள் சீரியல் நடிகர் நவீனை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

- Advertisement -

நவீன் பற்றிய தகவல்:

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இதயத்தை திருடாதே சீரியலின் கதாநாயகன் தான் நவீன். நடிகர் நவீன் சின்னத்திரை வருவதற்கு முன்பே வெள்ளித்திரையில் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் முதன் முதலாக மலையாளத்தில் Money Ratnam என்ற படம் மூலம் தான் நடிகராக நடிக்க தொடங்கி இருந்தார். அதன் பின் தமிழில் மசாலா படம், பூலோகம், மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதயத்தை திருடாதே சீரியல்:

அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் தான் இவர் சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தார். பின் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். அதோடு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டாப் ரேட்டிங்கில் ஒன்றாக இந்த சீரியல் இருந்தது. மேலும், இந்த சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீனும், சகானா சிவா கதாபாத்திரத்தில் ஹிமா பிந்துவும் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

நவீன்-கண்மணி நிச்சயதார்தம் :

இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனால் பலரும் இவர்கள் காதலிப்பதாக நினைத்து இருந்தார்கள். ஆனால், நடிகர் நவீனும், செய்தி வாசிப்பாளர் கண்மணியும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று தகவல் வெளியானது சீரியல் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. அது மட்டுமில்லாமல் நவீன் குடும்பமும், கண்மணி குடும்பமும் நீண்ட கால நண்பர்களாம். இது காதல் திருமணம் இல்லை இரு வீட்டிலும் பேசி முடிவு செய்யப்பட்ட திருமணம் என்று கூறப்படுகிறது. பின் ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள விஜயாபார்க்கில் இவர்களின் திருமண நிச்சயதார்தம் நடைபெற்று இருந்தது.

நவீன்-கண்மணி திருமணம்:

இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தான் நவீன் உடைய இதயத்தை திருடாதே சீரியல் முடிவடைந்தது. இதனை அடுத்து நவீன் அவர்கள் கண்ட நாள் முதல் என்ற சீரியலில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்திருந்த கண்மணி- நவீன் திருமணம் இன்று நடந்து முடிந்துள்ளது. இவர்களுடைய திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள், முக்கிய சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். தற்போது இவர்களுடைய திருமண புகைபடங்கள் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement