கொரோனாவுக்கும் எனக்கு என்ன சம்மந்தம் ? அருண் விஜய் பட நடிகையின் பேட்டி.

0
8033
- Advertisement -

சின்னத்திரையில் நாயகி சீரியலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் நடிகை வித்யா பிரதீப். இவர் இந்திய மாடல் அழகியும் ஆவார். இவர் திரைத்துறை மட்டுமின்றி ஒரு தனியார் கண் மருத்துவமனையில் ஜூனியர் சயின்டிஸ்ட் ஆகவும் இயங்கி வருகிறார். இவர் கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவை சேர்ந்தவர். தமிழில் 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘சைவம்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு வந்தார். இதனை தொடர்ந்து பசங்க, ஒன்னுமே புரியல, அதிபர், அச்சமின்றி, களரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2 உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை வித்யா சின்னத்திரையில் தூள் கிளப்பி வருகிறார்.

-விளம்பரம்-
வித்யா பிரதீப்

- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘நாயகி’ என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இவர் இந்த நாயகி சீரியல் மூலம் தான் மக்களிடையே அதிக அளவில் பிரபலமானர். இந்த சீரியல் தொடங்கியதிலிருந்தே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி விட்டது. அதுமட்டுமல்லாமல் இவர் கடந்த அருண் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த தடம் படத்திலும் நடித்திருந்தார்.

கடந்த சில நாட்களாக இவர் நர்ஸ் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. நாடு முழுவதும் கொரோனா நோய்யால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இப்படி ஒரு புகைப்படம் வைரலானது மேலும், இவர் கொரோனா நோய்க்காக செவிலியராக பணியாற்றி வருகிறார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து பிரபல பத்திரிகை ஒன்றிற்கு விளக்கமளித்துள்ளார் வித்யா.

-விளம்பரம்-
வித்யா பிரதீப்

பயோ டெக்னாலஜி முடித்துவிட்டு, தற்போது ஆராய்ச்சி படிப்பில் முனைவர் பட்டத்துக்காக படித்துக்கொண்டிருக்கும் வித்யா அந்த பேட்டியில் கூறி இருப்பதாவது, தற்போது படப்பிடிப்புகள் இல்லை என்பதால் என்னுடைய ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி கொண்டு வருகிறேன். ட்விட்டர்ல என்னோட படிப்பு தொடர்பான ஆராய்ச்சி வேலைகள், நான் லேப்ல இருக்கற மாதிரியான புகைப்படங்களைப் பார்த்துட்டு நிறைய பேர் போன் பண்ணிக் கேட்டாங்க. அது என்னோட ட்விட்டர் கணக்கே கிடையாது.

மேலும், நான் என்னோட செல் கல்ச்சுரல் ரிசர்ச் வேலைகள்ல இருந்தப்ப எடுத்த புகைப்படங்கள்தான் அது . மேலும், அப்துல்கலாம் சார்கூட இருக்க மாதிரியான புகைப்படங்களும் ஷேர் பண்ணியிருக்காங்க. அதுவும் ரொம்ப வருசத்துக்கு முன் எடுத்த புகைப்படம் தான். இதையெல்லாம் இந்த மாதிரியான சமயத்துல ஏன் எடுத்து பரப்பிட்டு இருக்காங்கன்னு புரியல என்று கூறியுள்ளார்.

Advertisement