சினிமாவில் வருவதர்க்கு முன்பாக நயன்தாரா இப்படி ஒரு வேலையை செய்து வந்தாரா. வைரலாகும் வீடியோ.

0
32403
Nayanthara
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. இது பல பேருக்கு தெரியாது என்று கூட சொல்லலாம். மேலும்,நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர். மேலும்,ரசிகர்கள் நயன்தாராவை எவர்கிரீன் நடிகை என்று கூட அழைப்பார்கள். இவர் சினிமாத்துறைக்கு முதன் முதலாக 2003ஆம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் தான் அறிமுகமானர்.

-விளம்பரம்-

பின்னர் தமிழில் 2005ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர், தமிழ் மொழியில் மெஹா சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து வருகின்றார். தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.நடிகை நயன்தாரா சினிமா திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு தோற்றத்தில் தான் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் அழகிய குடும்பம். வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும், நடிகை நயன்தாரா அஜீத்துடன் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘விஸ்வாசம்’ படம் மூலம் மீண்டும் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார். தற்போது தெலுங்கில் உருவான சிரஞ்சீவியின் நடிப்பில் வெளிவந்த ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடிகை நயன்தாரா சிறப்பான தோற்றத்தில்நடித்திருந்தார். சமீபத்தில் இவரது பிறந்தநளை இவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவில் சிறப்பாக கொண்டாடினர்.

மேலும், இவரது பிறந்தநாளை ஒட்டி இவரது ரசிகர்களும் பல்வேறு நல திட்ட உதவிகளை செய்தனர். ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து இன்று தமிழ் திரையுலகில் தொட முடியாதா இடத்தில் இருக்கிறார் நயன்தாரா. ஆம், நடிகை நயன்தாரா ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். அந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement