பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் அழகிய குடும்பம். வைரலாகும் புகைப்படம்.

0
52685
sujitha
- Advertisement -

தற்போது விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோஸ் சீரியலில் தனம் என்ற கதாபத்திரத்தில் நடிகை சுஜித்தா நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சுஜித்தா அவர்கள் சீரியலுக்குபுதிது கிடையாது, தமிழ் மக்களுக்கும் புதிது கிடையாது. ஏன்னா நடிகை சுஜித்தாவைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவர் சினிமா படங்களிலும் சீரியல்களிலும் நடித்து உள்ளார். மேலும், நம்ம நடிகை சுஜித்தா யாரு? அதோடு சுஜித்தா குடும்பத்தைப் பற்றியும், அவர் தற்போது என்ன செய்திருக்கிறார் என்பதை பற்றியும் பார்க்கலாம்….

-விளம்பரம்-

சுஜித்தாவின் அப்பா பெயர் டி.எஸ். மணி மற்றும் அம்மா பெயர் ராதா ஆகும். மேலும்,நடிகை சுஜித்தா அவர்கள் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் என்னும் ஊரில் ஜூலை மாதம் 12 ஆம் தேதி 1983 இல் பிறந்தார். அதோடு இவருக்கு ஒரு தங்கையும், ஒரு அண்ணனும் உள்ளார்கள். அவர் அண்ணனுடைய பெயர் சூரிய கிரன். இவர் சினிமா திரைப்பட இயக்குனர் ஆவார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், சூரிய கிரன் மனைவி பெயர் கல்யாணி ஆகும். இவர்களும் ஒரு நடிகை தான். மேலும்,நடிகை கல்யாணி பல படங்களில் நடித்து உள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சரத்குமார் நடிப்பில் வந்த ‘சமுத்திரம்’ என்ற படத்தில் தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்தவர். சுஜித்தாவின் கணவர் பெயர் தனுஷ். இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர்.

இதையும் பாருங்க : முதன் முறையாக தனது அண்ணியுடன் கார்த்தி எடுத்துக்கொண்ட செல்பி. வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

இவர் முதன் முதலில் போட்டோகிராபராக தான் இருந்தார். பின்னர் விளம்பர படங்கள் எடுக்கும் இயக்குனர் ஆக மாறி விட்டார். அதுமட்டும் இல்லாமல் அவருடைய சில விளம்பர படங்களிலும் கூட நம்ம நடிகை சுஜித்தா நடித்து உள்ளார். மேலும், இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். அவருடைய பெயர் தன்வின். இதனைத்தொடர்ந்து சுஜித்தா அவர்கள் பிறந்து, வளர்ந்தது எல்லாம் கேரளாவில் தான். இருந்தாலும் இவர் தற்போது சென்னையில் தான் வசித்து வருகிறார். இவர் முதன் முதலாக சினிமாத் துறையில் குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார். அதுவும் 41 நாள் குழந்தையாக இருக்கும் போது. அது எப்படி என்று பார்த்தால் இவருடைய அண்ணன் சூரிய கிரனுக்கு அப்போது எட்டு வயது. இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

-விளம்பரம்-

அதன் மூலம் தான் நடிகை சுஜித்தாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பல படங்களில் சுஜித்தாவுக்கு குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது மட்டுமில்லாமல் இவர் பல விருதுகளையும் வாங்கி உள்ளார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் டிவியில் 30 சீரியலுக்கு மேல் நடித்து உள்ளார். தற்போது நடிகை சுஜித்தா அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இந்த சீரியலை தெலுங்கில் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அதோடு தெலுங்கிலும் இவர் தான் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisement