நேர்கொண்ட பார்வை ட்ரைலரை பார்த்துவிட்டு ட்விட்டரில் புகழ்ந்த நயன்தாரா.!

0
1156
Nayan
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ட்ரைலர் நேற்று (ஜூன் 12 )மாலை 6 மணிக்கு வெளியாகி இருந்தது. ரசிகர்கள் அவளுடன் எதிர் பார்த்த இந்த படத்தின் ட்ரைலர் வெளியான சில மணி நிமிடங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. ரசிகர்கள் சற்றும் எதிர்பாரத இந்த அப்டேட்டாள் அஜித் ரசிகர்கள் கொண்டாடத்தில் ஆழ்ந்தனர்.

-விளம்பரம்-

மேலும் #Nerkondapaarvaitrailer என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்த ட்ரைலர் வெளியான வெறும் 20 நிமிடத்தில் 467,299 views கடந்து 159K லைக்ஸ் பெற்றுள்ளது. இதுவரை இந்த ட்ரைலரை 5,353,657 பேர் பார்த்துள்ளனர். மேலும், இந்த ட்ரைலருக்கு 633k லைக்குகளும் வந்துள்ளது.

இதையும் படியுங்க : பும்ராவுடன் காதல் ? கிசுகிசுக்பட்ட சர்ச்சைக்கு முதன் முறையாக பதிலளித்துள்ள அனுபமா.!

- Advertisement -

படத்தின் ட்ரைலரில் அஜித்தின் வசனங்களும், அவரது நடிப்பும் வேற லெவலில் இருக்கிறது என்று பல்வேறு நடிகர்களும் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு ட்விட்டரில் கமெண்ட் செய்துள்ளார் நடிகை நயன்தாரா.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நயன், நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் மிகவும் அடர்த்தியாக உள்ளது. எப்போதும் போல தல இந்த படத்திலும் சிறப்பாக இருக்கிறார். அணைத்து ரசிகர்களுக்கு ஒரு விருந்து காத்துக்கொண்டிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

நயன்தாரா இதுவரை அஜித்துடன் 3 படங்களில் நடித்துள்ளார். மேலும், அஜித் தான் தனுக்கு பிடித்த நடிகர் என்று நயன்தாரா பல முறை கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதியாக இவர்கள் இருவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் அமோக வெற்றி பெற்றது.

Advertisement