பும்ராவுடன் காதல் ? கிசுகிசுக்பட்ட சர்ச்சைக்கு முதன் முறையாக பதிலளித்துள்ள அனுபமா.!

0
1945
- Advertisement -

கடந்த சில நாட்களாக தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான அனுபமா பரமேஸ்வரன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடன் காதலில் இருப்பதாக ஒரு செய்தி படு வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் பும்ரா குறித்து முதன் முறையாக பேசியுள்ளார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

-விளம்பரம்-
Indian Cricketer, Jasprit Bumrah Is Dating South Film Actress, Anupama Parameswaran? Details Inside

மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடித்த பிரேமம் படம் தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தில் மலர் டீச்சருக்கு பின்னர் நம் அனைவரயும் கவர்ந்தது நடிகை அனுபமா தான். இந்த நிலையில் அனுபமா பும்ராவுடன் காதலில் இருப்பதாக ஒரு செய்தி வைரலானது.

- Advertisement -

எப்போதுமே பேட்டிங்கில் சிறந்து விளங்கும் இந்திய அணிக்கு, நிரந்தரமான சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இருந்தது. பேட்டிங்கில் அசத்திய இந்திய அணி, பவுலிங்கில் ஜொலிக்காதது பெரும் பின்னடைவாகவே இருந்தது. ஆனால், இந்திய அணிக்கு பும்ரா ஒரு சிறப்பான பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.

Image result for anupama parameswaran

பும்ராவுடன் அனுபமா இணைத்து பேசப்பட்டதிற்கு காரணமே இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் பூம்ராவின் ஸ்டேட்டஸ் அனைத்திற்கும் டுவிட்டரில் லைக் செய்து வருகின்றார்.அதேபோல் பூம்ராவும், அனுபமா புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகிறார். இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார் என்று முடிச்சு போட துவங்கி விட்டனர்.

-விளம்பரம்-

இருவரும் டேட்டிங் கூட சென்றதாக கிசுகிசுக்கபட்டது. இந்த நிலையில் பும்ரா குறித்து முதல் முறையாக பேசியுள்ளார் அனுபமா. இதுகுறித்து பேசியுள்ள அவர், பும்ரா ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்பது மட்டுமே எனக்கு தெரியும். இதுவரை நான் அவரை சந்தித்ததே இல்லை. நான் அவரை காதலிப்பதாக பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது. எந்த ஒரு அடித்தளமும் இல்லாமல் ஒரு பெண்ணை பற்றி சமூக வலைதளத்தில் இப்படி ஒரு செய்தி பரவியது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Advertisement