கலைஞர் 100 நிகழ்ச்சியில் நயன்தாரா கடுப்பாகி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கலைஞர்100 விழா படு பிரம்மாண்டமாக நடைபெறது. சில மாதங்களுக்கு முன்பே இந்த விழா நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். அந்த வகையில் இந்த விழா கடந்த மாதமே நடைபெறுவதாக தான் இருந்தது. ஆனால், மிக்ஸாம் புயல் மற்றும் கனமழையால் தான் இந்த நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின், ரஜினி, கமல், சூர்யா, விஜய், தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன், இசைஞானி இளையராஜா உட்பட திரை பிரபலங்கள் பலர் பங்கேற்கஇருந்தனர். அதோடு தெலுங்கில் சிரஞ்சீவி, மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் உட்பட பிற மொழி பிரபலங்களும் இந்த விழாவில் கலந்துகொண்ட இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர்கள் யாரும் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை.

Advertisement

கலைஞர் 100 :

மேலும், நடிகைகளை பொறுத்த வரை நயன்தாரா, ரோஜா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் கலந்துகொண்டனர். ஆனால், இவர்கள் யாவரும் கேப்டன் இறப்பிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சமூக வலைதளத்தில் இவர்கள் பெரிதும் விமர்சிக்கப்பட்டு இருந்தார்கள்.அதிலும் குறிப்பாக எந்த ஒரு பட ப்ரோமோஷனுக்கும் பட விழாவிற்கும் செல்லாத நயன் இந்த விழாவிற்கு வந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

விழாவிற்கு வந்த நயன் :

மேலும், இந்த விழாவில் நடிகர்களில் ரஜினி, கமல், தனுஷ், சூர்யா ஆகியோர் மேடையில் கலைஞர் குறித்து பேசி இருந்தனர். ஆனால், நயன்தாரா மேடையேறி பேசவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த விழாவிற்கு வந்த நயன், வண்டியில் ஏறி செல்லும் போது கடுப்பாகி இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த விழாவிற்கு வந்தவர்கள் உள்ளே செல்வதற்காக சிறிய ஆட்டோ வகையான வாகனத்தில் அழைத்து செலலப்பட்டனர்.

Advertisement

கடுப்பான நயன் :

அப்போது நயன்தாரா வேண்டியில் அமர்ந்த போது சில ஆண்கள் வேண்டியின் பின்னால் அமர்ந்தனர். அப்போது முன்னே இருந்த நபர் ஒருவர் ‘நீங்கள் வண்டியில் இருந்து இறங்கி அடுத்த ட்ரிப்பில் வாங்க என்று சொன்னார். இதனால் கடுப்பான நயன் ‘Why, நான் எதுக்கு எறங்கணும், வேணும்னா அவங்கள இறங்க சொல்லுங்க என்று கடுப்பாகி கூறி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நயன்தாராவின் பாலிசி :

பொதுவாக நயன்தாரா தனது சொந்த தயாரிப்பு படங்களை தவிர வேறு எந்த படத்தின் ப்ரோமோஷனுக்கோ, இசை வெளியீட்டு விழாவிற்க்கோ செல்வது கிடையாது. இதுகுறித்து அவர் சொன்ன போது’ ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றால் கூட எங்காவது ஒரு ஓரமாக நிற்க வைத்து விடுவார்கள். ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக நம்மைப் பற்றி சொல்வார்கள். எந்த விதத்திலும் நமக்கு ஒரு முக்கியத்துவம் இருக்காது. அதனால் தான் நான் எந்த ஒரு பிரமோஷனுக்கும் போகாமல் இருக்க காரணம்’ என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement