ரோட்டு கடையில் பேரம் பேசும் நயன்தாரா – வைரலாகும் வீடியோ.

0
16038
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் நடிகை நயன்தாரா ஜொலித்து கொண்டு இருக்கிறார். என்றென்றும் தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக நயன்தாரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீபகாலமாகவே இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது. அதிலும் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தேடி தேடி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த நெற்றிக்கண் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்து. இதனைத் தொடர்ந்து தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் சார காற்றே பாடல் சில தினங்களுக்கு முன்பு தான் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. இந்த பாடல் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்படும் என்று அறிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

மேலும், சோசியல் மீடியாவில் நயன்தாராவைப் பற்றி ஏதாவது ஒரு விஷயம் வந்தால் போதும் அதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி விடுவார்கள். அந்த வகையில் தற்போது நயன்தாராவின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் நயன்தாரா அவர்கள் ரோட்டுக் கடையில் நின்று பேரம் பேசி உள்ளார். அது வேற ஒண்ணும் இல்லைங்க, நயன்தாரா அவர்கள் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தின் படபிடிப்பு போது எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் அனைவரும் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். தற்போது நயந்தாரா அவர்கள் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சமந்தாவும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக போய் கொண்டு உள்ளது.

-விளம்பரம்-
Advertisement