விசுவாசம் படத்தில் நயன்தாராவுக்கு போட்டியாக ரஜினி பட நடிகை .! யார் தெரியுமா.?

0
412
Actress-nayanthara

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் “விசுவாசம்” படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். அதுபோக தற்போது சூப்பர் ஸ்டார் ஜோடியாக நடித்த ஒரு நடிகையும் இந்த படத்தில் தற்போது இணைந்துள்ளாராம்.

Ajith kumar with Nayanthara

அது வேறு யாரும் இல்லை சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “காலா” படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்த நடிகை ஈஸ்வரி ராவ் தானம். தமிழில் “சிம்மராசி, சுள்ளான்” போன்ற படங்களில் நடித்த இவர் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு “காலா” படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

தற்போது அஜித் நடிக்கும் “விசுவாசம்”படத்தில் இவரது கதாபாத்திரம் என்ன வென்று தெரியவில்லை. ஆனால், நடிகர் அஜித் இந்த படத்தில் இரு வேடத்தில் நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது..அதனால் இந்த படத்தில் தந்தை அஜித்திற்கு இவர் ஜோடியாக நடிப்பாரோ என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என்று எதிர்ப்பத நிலையில், சமீபத்தில் நடந்த திரைப்பட ஸ்ட்ரைகால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில நாட்கள் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று தான் வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிபிடிக்கது.