மீண்டும் சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த லேடி சூப்பர் ஸ்டார். அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.

0
16398
thalaivar-168
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . சில ஆண்டுகளாகவே ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் வந்தவுடன் சினிமாவில் அவர் நடிக்க மாட்டார் என்ற வதந்தி கிளப்பி விட்டது. ஆனால், அவர் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை படம் ரிலீஸ் செய்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி அவர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

தலைவர் ரஜினிக்காந்த்தின் அடுத்த படத்திற்கான பூஜை நசமீபத்தில் நடைபெற்றது. இதனால் ரசிகர்கள் வெளி பயங்கர குஷியில் ஆரவாரம் செய்து வருகிறார்கள். சிவா இயக்கத்தில் ரஜினி காந்த் நடிக்கும் அடுத்த படம் “தலைவர் 168”. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் நடக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் இரு வேடத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : அஜித், ஷாலினியை திருமணம் செய்து கொண்டதும் வருத்தப்பட்ட பிரபல நடிகர். சுஹாசினி சொன்ன சீக்ரெட்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள் என்ற தகவல் வந்து உள்ளது. இதனால் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்று பல கேள்விகள் இணையங்களில் எழுந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

-விளம்பரம்-
Image result for thalaivar 168 pooja"

ஏற்கனவே இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என்று மூன்று கதாநாயகிகள் இணைந்த நிலையில் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இணைந்துள்ளார். ஆனால், இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே ரஜினியுடன் நயன்தாரா, சந்திரமுகி, குசேலன், தர்பார் என்று மூன்று படத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த ,மூன்று படத்திலும் நயன்தாராவின் ரோல் கொஞ்சம் டம்மியாக தான் காட்டப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement