அஜித், ஷாலினியை திருமணம் செய்து கொண்டதும் வருத்தப்பட்ட பிரபல நடிகர். சுஹாசினி சொன்ன சீக்ரெட்.

0
88150
ajith-shalini
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்துடன் பல ஆண்டுகளாக முன்னனி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அஜித். தல அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த விசுவாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படமும் சூப்பர் ஹிட். தற்போது இவர் வலிமை என்ற படத்தில் மும்முரமாக நடித்து கொண்டு இருக்கிறார். அதே போல் தமிழ் சினிமாவில் பேபி ஷாலினியாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை ஷாலினி. நடிகை ஷாலினி அவர்கள் 1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளிவந்த அஜித் அவர்களின் 25 வது படமான “அமர்க்களம்” படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

வீடியோவில் 4:03 நிமிடத்தில் பார்க்கவும்

- Advertisement -

இதனைத் தொடர்ந்து அஜித்தும், ஷாலினியும் இரு வீட்டார் பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்களுடைய கல்யாணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2008இல் அனுஷ்கா என்ற அழகான பெண் குழந்தையும், 2015ம் ஆண்டு ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது உள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு நடிகை ஷாலினி அவர்கள் முழு வேலையையும் தன் குடும்பத்தை கவனிப்பதிலேயே அதிக நேரம் செலுத்தி வந்தார். இது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

இதையும் பாருங்க : பிக் பாஸிற்கு முன்பே எனக்கும் தர்ஷனுக்கு நிச்சயதார்த்தம் கூட முடிந்தது. ஆதாரத்தை வெளியிட்ட சனம் ஷெட்டி.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை ஷாலினி அவர்கள் அஜீத்தை திருமணம் செய்து கொண்டது நடிகர் அமிதாப் பச்சனுக்கு பிடிக்க வில்லை என்று நடிகை சுகாசினி அவர்கள் பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். தற்போது இந்த நியூஸ் சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சுகாசினி. மிகப் பிரபலமான இயக்குனரும், தயாரிப்பாளருமான மணிரத்தனத்தை இவர் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நடந்த பேஷன் டிசைன் கடை திறப்பு விழா நிகழ்ச்சிக்காக நடிகை சுஹாசினி வந்து இருந்தார்.

அப்போது அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் கூறியது, ஷாலினி நடிப்பை பார்த்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவர்களே வியந்து போனார். நடிகை ஷாலினி அவர்கள் இந்த அளவிற்கு நடிக்கிறார்களா! ஆனால், அவர்களை அஜித் திருமணம் செய்து கொண்டார். இனி மேல் நடிகை ஷாலினி சினிமாவில் நடிக்க மாட்டார்கள். இது ரொம்ப கஷ்டமாக இருக்கு. இவ்வளவு பிரமாதமாக நடிக்கும் நடிகையை தமிழ் சினிமா இழந்து விட்டது என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கூறியதாக சுகாசினி அவர்கள் பேட்டியில் கூறியிருந்தார். தற்போது இவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement