சென்னைக்கு போய் பொழச்சிக்கலாம்னு நெனைக்கறவன் இந்த பட்டத பாத்தான் சென்னைக்கே வரமாட்டான் – ப்ளூ சட்டை சேட்டை.

0
21258
netrikkan
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தை கழுவி ஊற்றியுள்ளார் மாறன். தமிழ் திரைப்பட உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. சமீப வருடங்களாக நயன்தாரா, கதாநாயிகளுக்கு முக்கியதுவு கொடுக்கும் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : முதல் முறையாக படு கிளாமர் உடையில் அனு இம்மானுவேல் நடத்திய போட்டோ ஷூட் – ஷாக்கான ரசிகர்கள்.

- Advertisement -

இவர் லீடு ரோலில் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அந்த வகையில் தற்போது தனது சொந்த தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’ படத்தின் மூலம் மீண்டும் லீடு ரோலில் நடித்துள்ளார் நயன். இந்த படம் நேற்று ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஒரு கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் 2011 ஆம் ஆண்டு கொரியன் மொழியில் வெளியான ‘Blind’ என்ற படத்தின் ரீ- மேக் தான் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை விமர்சித்து உள்ள ப்ளூ சட்டை மாறன், இந்த படத்தை 2.30 நேரம் எடுத்து இழு இழுன்னு இழுத்துட்டாங்க. படத்தில் ஹீரோயின்க்கு வெய்ட் ஏத்தனனும்னு செய்துள்ளது பெரிய மைனஸ். எவனாவது சென்னைக்கு போய் பொழச்சிக்கலாம்னு இந்த படத்தை பாத்தா நிச்சயம் சென்னைக்கு வர மாட்டேன்.

-விளம்பரம்-
Advertisement