தனது பழைய புகைப்படத்தை பதிவிட்ட நயன்தாரா. வாயடைத்து போன ரசிகர்கள்.

0
119082
nayanthara
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. இது பல பேருக்கு தெரியாது என்று கூட சொல்லலாம். மேலும்,நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர். மேலும்,ரசிகர்கள் நயன்தாராவை எவர்கிரீன் நடிகை என்று கூட அழைப்பார்கள். இவர் சினிமாத்துறைக்கு முதன் முதலாக 2003ஆம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் தான் அறிமுகமானர்.

-விளம்பரம்-
View this post on Instagram

Throwback ❤️

A post shared by nayanthara (@nayantharah) on

பின்னர் தமிழில் 2005ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர், தமிழ் மொழியில் மெஹா சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து வருகின்றார். தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.நடிகை நயன்தாரா சினிமா திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு குடும்பபாங்கான தோற்றத்தில் தான் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : வெளுத்தது மீரா மிதுனின் சாயம். ஊழல் தடுப்பு அதிகாரி பறிக்கப்பட்டது உண்மை தான்.

- Advertisement -

அப்படி இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்து விடுகிறது. இறுதியாக விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்த நயன் தற்போது சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாக நடிகை நயன்தாரா தனது காதலருடன் கோவில் கோவிலாக சுற்றி வருகிறார். மேலும், அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார் நயன். இந்த நிலையில் நடிகை நயன் தன்னுடைய பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் நயன்தாராவா இது என்று வாயடைத்து போயுள்ளார்கள்.

-விளம்பரம்-

நடிகை நயன்தாரா ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து இன்று தமிழ் திரையுலகில் தொட முடியாதா இடத்தில் இருக்கிறார் நயன்தாரா. ஆம், நடிகை நயன்தாரா ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். அந்த வீடியோ ஒன்று நடிகை நயன்தாராவின் பிறந்தநாளன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவந்தது. அதனை கண்டு ரசிகர்கள் ஏற்கனவே கொஞ்சம் ஷாக்கில் இருந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement