அந்த படத்தில் நடித்ததை நினைத்து இன்னும் வருத்தம், நயன் வைத்த குற்றச்சாட்டு- இயக்குனர் கொடுத்த விளக்கம்

0
360
- Advertisement -

அந்தப் படத்தில் நடித்ததை நினைத்து இன்றுவரை கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று நயன்தாரா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகை ஆகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் ஒருவராகவும், பல ஆண்டுகாலமாக லேடி சூப்பர் ஸ்டார் ஆக நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் முன்னணி நடிகை மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும், சமீபகாலமாக இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்படி இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கஜினி படத்தில் நடித்தது குறித்து நயன்தாரா கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

நயன் பேட்டி:

அதில் அவர், என்னுடைய வாழ்க்கையில் நான் சில தவறுகள் செய்திருக்கிறேன். அதில் ஒன்று கஜினி படத்தில் நடித்தது. அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், எனக்கு பெரிதாக முக்கியத்துவம் கிடைக்கவில்லை. அந்த படத்தில் துணை கதாபாத்திரம் கிடைத்தது. இருந்தும் என்னுடைய கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. நான் இந்த படத்தில் நடிக்க நினைத்தது மோசமான முடிவு. அந்த இடத்தில் என்னுடைய புகைப்படங்கள் எல்லாம் மோசமாக வெளியாகியிருந்தது.

கஜினி படம் குறித்து சொன்னது:

இருந்தாலும் அதை ஒரு நான் அனுபவமாக எடுத்துக் கொண்டேன் என்று கூறியிருந்தார். நயன்தாரா கஜினி படம் குறித்து வைத்த குற்றச்சாட்டுக்கு அப்போதே இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், ஒருவருக்கு அந்த கதாபாத்திரம் பிடிக்கவில்லை, பிடிக்கிறது என்றால் அதற்கு கதாபாத்திரத்தை குறைக்கவோ, பெரிதாகவோ முடியாது. பிடிக்காதவனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைக்கும். பிடித்தவனுக்கு சில நேரங்களில் சிறிய கதாபாத்திரங்கள் தான் கிடைக்கும். இது யார் கையிலும் கிடையாது.

-விளம்பரம்-

ஏ ஆர் முருகதாஸ் விளக்கம்:

அசின் உடைய கேரியரில் கஜினி ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்தது. இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்தது. ஆனால், அது நயன்தாராவிற்கு தான் ஒர்க் அவுட் ஆகவில்லை என்று கூறியிருந்தார். கடைசியாக நயன் நடித்த படம் ‘அன்னபூரணி’. இது நயன்தாராவின் 75வது படம் ஆகும். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது.

நயன்-விக்னேஷ் சிவன் குறித்த தகவல்:

இதை அடுத்து இவர் கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கு இடையில் கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்த நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சுமார் ஏழு ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் விக்கி-நயன் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பெற்றுக் கொண்டனர். தற்போது இருவருமே தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

Advertisement