கோடிகளில் கொட்டி கொடுத்தாலும் அந்த கேரக்டரில் மட்டும் நடிக்க மாட்டேன் – நயன்தாரா அதிரடி. காரணம் இது தானாம்.

0
713
nayanthara

தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து நயன்தாராவின் ரசிகர்கள் பலரும் புகைந்து வருகின்றனர்.தற்போது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளை கடந்து வந்துள்ளார் நயன்தாரா.

Film review: Andhadhun - Indian Link

தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்குவதும் நயன் தான். இப்படி ஒரு நிலையில் இந்தியில் சூப்பர் ஹிட் அடித்த ‘அந்தாதுன்’ படத்தின் தெலுங்கு ரீ- மேக்கில் நடிக்க மறுத்துள்ளார். பாலிவுட்டில் கடந்த ஆண்டு பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம் ‘அந்தாதுன்’. இந்த படத்தில் ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கினார். பிளாக் காமெடி கிரைம் த்ரில்லர் படம் ஆகும். இந்த திரைப்படம் இந்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையம், வசூலையும் பெற்றது. ‘

- Advertisement -

தி பியானோ டியூனர்’ என்ற பிரெஞ்சு படத்தின் தழுவலாக தான் இந்த படம் உருவானது. அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் கூட இந்த படத்திற்கு சார்பாக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை என மூன்று தேசிய விருதுகளையும் வென்றது. இந்த படத்தின் தமிழ் ரீ-மேக்கில் டாப் ஸ்டார் பிரசாந்த் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

Andhadhun: Accidents That Blind Your Belief - ODISHA BYTES

இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடிக்க நயன்தாராவை அணுகிய போது அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த படத்தில் நடிக்க அதிக சம்பளம் கொடுக்க தயாராக இருந்தும், காதலருக்காக கணவரை கொலை செய்யும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரம் என்பதால் அப்படத்தில் நடிக்க நயன்தாரா மறுப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. காதலர் மீது நயன்தாராவிற்கு படத்தில் கூட எவ்வளவு பாசம்.

-விளம்பரம்-
Advertisement