‘பொதுவா எந்த நிகழ்ச்சிக்கும் போவ மாட்டேன்’. ஆனா, இங்க வந்ததுக்கு காரணம் – நயன்தாரா கொடுத்த விளக்கம்

0
413
- Advertisement -

மறைந்த நடிகர் முரளி மகனின் பட விழாவில் நடிகை நயன்தாரா கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகை ஆகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் ஒருவராகவும், பல ஆண்டுகாலமாக ‘லேடி சூப்பர் ஸ்டார் ஆக நயன்தாரா’ கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இது ஒரு பக்கம் இருக்க, பொதுவாகவே நயன்தாரா அவர்கள் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை. தன்னுடைய படத்தின் புரமோஷனுக்கு கூட அவர் வருவதில்லை. இது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்திருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் தன்னுடைய நண்பரும், இயக்குனருமான விஷ்ணுவர்தன் உடைய படத்தின் விழாவிற்கு சென்று இருப்பது தான் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது.

- Advertisement -

நேசிப்பாயா படம்:

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘நேசிப்பாயா’. இந்த படத்தில் சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் விழா நேற்று மாலை நடந்திருக்கிறது. இதில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டார்கள்.

விழாவில் நயன் சொன்னது:

அந்த வகையில் நடிகை நயன்தாராவும் கலந்து கொண்டு இருந்தார். பின் இவர் மேடையில், நான் பொதுவாக எந்த விழாவிலும் கலந்து கொள்ள மாட்டேன். ஆனால், இந்த விழா எனக்கு ரொம்ப ஸ்பெஷல். காரணம், இது என்னுடைய இயக்குனர் விஷ்ணு உடைய படம். இது என்னுடைய நெருங்கிய தோழி அணுவின் படம். கிட்டத்தட்ட இது ஒரு குடும்பம் விழா தான். அதனால் தான் இந்த விழாவிற்கு வர முடியாது என்று என்னால் சொல்ல முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

நயன் திரைப்பயணம்:

தற்போது நேசிப்பாயா பட விழாவில் நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக நயன் நடித்த படம் ‘அன்னபூரணி’. இது நயன்தாராவின் 75வது படம். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இதை அடுத்து இவர் கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

நயன்தாரா குடும்பம்:

இதனிடையே நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சுமார் ஏழு ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் விக்கி-நயன் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. வாடகைத் தாய் மூலம் தான் இந்த குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர், உலக் என்று பெயர் வைத்தது நாம் அறிந்ததே.

Advertisement