The Lip Balm Companyஐ தொடர்ந்து நயன்தாரா ஆரம்பித்துள்ள புதிய நிறுவனம் – அவரே வெளியிட்ட அறிவிப்பு.

0
1112
- Advertisement -

பொதுவாக நடிகர்கள் சிலர் தங்கள் பணத்தை மீண்டும் சினிமாலவிலேயே முதலீடு செய்யார்கள். நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி போன்றவர்கள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை இயக்கி வருகிறார்கள். ஆனால், நயன்தாரா போன்ற ஒரு சில நடிகைகளை தவிர இந்த ரிஸ்க்கை எடுப்பது இல்லை. அதற்கு மாறாக, பெரும்பாலும் நடிகைகள் தங்களுடைய சம்பாத்தியத்தை முழுவதும் சொத்துக்கள் ஆகவும், ரியல் எஸ்டேட் மீதும் முதலீடு செய்வார்கள். அதோடு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வாடகைக்கு வாங்கி விடுகிறார்கள். நகை கடை, திருமண மண்டபம் என்று பல வகைகளில் தங்களுடைய முதலீடுகளை போட்டு தொழில் நடத்தி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நடிகைகள் சினிமாவை தவிர என்ன தொழில் செய்கிறார்கள். இதில் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கபடும் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தி ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது போக கடந்த 2021 ஆம் ஆண்டு அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில் இறங்கினர் நயன்.

- Advertisement -

இதன் முதற்கட்டமாக Lip Balm Company என்று லிப்ஸ்டிக் பொருளை விற்பனை செய்யும் தொழிலில் இறங்கினார். மேலும், இந்த நிறுவனத்தை நடிகை நயன்தாரா, சரும மருத்துவர் ரெனிட்டா ராஜன் என்பவருடன் இணைந்து துவங்கினார். இதுகுறித்து பேசிய நயன்தாரா ‘சரும பராமரிப்பு பொருட்களை பொருத்தவரை நான் காம்ப்ரமைஸ் செய்து கொள்வது இல்லை. பொதுவாக நான் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் நான் எதிர்பார்ப்பது பாதுகாப்பு மற்றும் நல்ல ரிசல்ட் தான்.

எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் எந்த ஒரு பிரச்சனையும் விளைவுகளும் இல்லை என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன் என்று கூறி இருந்தார். நயன்தாரா இந்த பிஸ்னஸ்ஸை கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் தனது அழகு சாதன பிஸ்னஸ்ஸில் அடுத்தபடியாக அடுத்த கட்டத்தில் இறங்கி இருக்கும் நயன்தாரா தற்போது சருமக பிராடக்டுகளின் இறங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது நயன்தாரா 9skin என்ற அடுத்த நிறுவனத்தை துவங்கி இருக்கிறார். இதில் சருமத்திற்கு தேவையான அழுகு சாதன பொருட்களை விற்பனை செய்ய இருக்கிறார். மேலும், இந்த நிறுவனத்தை வரும் 29ஆம் தேதி துவங்க இருக்கிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ‘ ஆறு வருட அயராத முயற்சியையும் அன்பையும் வெளிப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய இயற்கை மற்றும் நவீன அறிவியலால் ஆதரிக்கப்படும் சூத்திரங்களுடன், உங்களைப் போலவே தனித்துவமான தயாரிப்புகளைக் குணப்படுத்துவதில் நாங்கள் எங்கள் இதயங்களைச் செலுத்தியுள்ளோம், மேலும் உங்கள் சுய பாதுகாப்பு வழக்கத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சுய காதல் பயணத்தில் எங்களுடன் இணைந்து ஆரோக்கியமான, ஒளிரும் சருமத்திற்கு வணக்கம் சொல்லுங்கள்!

நாங்கள் @9SKINOfficial ஐ அறிமுகப்படுத்துகிறோம். நீங்கள் தகுதியான சுய அன்பின் உழைப்பு இப்போது கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஏனென்றால் சுய அன்பு மட்டுமே நமக்குத் தேவை என்று நாங்கள் நம்புகிறோம்.9SKIN பயணம் செப்டம்பர் 29, 2023 அன்று தொடங்குகிறது. அற்புதமான தோல் பராமரிப்பு அனுபவத்திற்கு தயாராகுங்கள்! #9SKIN #ComingSoon #Selflove என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement