பலூன் முதல் நகை வரை – தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளின் சைட் பிஸ்னஸ் என்ன தெரியுமா ?

0
536
samantha
- Advertisement -

பொதுவாக நடிகர்கள் சிலர் தங்கள் பணத்தை மீண்டும் சினிமாலவிலேயே முதலீடு செய்யார்கள். நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி போன்றவர்கள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை இயக்கி வருகிறார்கள். ஆனால், நயன்தாரா போன்ற ஒரு சில நடிகைகளை தவிர இந்த ரிஸ்க்கை எடுப்பது இல்லை. அதற்கு மாறாக, பெரும்பாலும் நடிகைகள் தங்களுடைய சம்பாத்தியத்தை முழுவதும் சொத்துக்கள் ஆகவும், ரியல் எஸ்டேட் மீதும் முதலீடு செய்வார்கள். அதோடு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வாடகைக்கு வாங்கி விடுகிறார்கள். நகை கடை, திருமண மண்டபம் என்று பல வகைகளில் தங்களுடைய முதலீடுகளை போட்டு தொழில் நடத்தி வருகிறார்கள்.

-விளம்பரம்-
தி லிப் பாம் கம்பெனி

அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நடிகைகள் சினிமாவை தவிர என்ன தொழில் செய்கிறார்கள் என்பதை பார்ப்போம். இதில் முதலில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நயன்தாரா, சமந்தா துவங்கி தமன்னா, ஹன்சிகா என்று பலர் சொந்தமாக தொழில்களை நடத்தி வருகிறார்கள். யார் யார் என்ன தொழில் என்பதை பாப்போம்

- Advertisement -

நயன்தாரா :

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, Rowdy Pictures என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இது போக கடந்த ஆண்டு இவர், தீ லிப் பாம் என்ற கம்பெனி ஒன்றை துவங்கினார். அழகு சாதனப் பொருள்களில் முக்கிய அங்கம் வகிப்பது லிப் பாம். இதை மட்டுமே இந்த நிறுவனம் தயாரிக்கிறது. இதில் 100க்கும் மேற்பட்ட வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

சமந்தா :

தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் சமந்தா தற்போது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு விவகாரத்து செய்த சமந்தா தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், இவர் சொந்தமாக ‘ ‘சகி’ என்று பெயரில் ஆன் லைனில் ஜவுளி வியாபாரம் செய்கிறார். இதில் பெண்களுக்கான உடைகள் விற்கப்படுகின்றன.

-விளம்பரம்-

ஹன்சிகா :

அடுத்தபடியாக தமிழில் குட்டி குஷ்பூ என்று அழைக்கப்படும் ஹன்சிகாவை பற்றி பார்க்கலாம். ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாகா நடித்து வந்த ஹன்சிகாவிற்கு தற்போது முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சினிமா தொழில் டல்லாக இருந்தாலும் அம்மணியின் தொழில் படு ஜோராக இருந்து வருகிறது

தமன்னா :

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் தமன்னாவிற்கு சமீப காலமாகவே தமிழில் பெரிய நடிகர்களின் படங்கள் அமையவில்லை. மேலும், ஆபரணங்களில் அதிக ஆர்வம் கொண்ட இவர் கடந்த 2015 ஆம் ஆண்டே ‘ஒயிட் அண்ட் கோல்ட்’ என்ற பெயரில் நகைகளை டிசைன் செய்து விற்கும் தொழிலை தொடங்கினர்.

காஜல் அகர்வால் :

தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என்று பல நடிகர்களுடன் நடித்த காஜல் தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிஸ்னஸ் மேன் கெளதம் என்பவரை திருமணம் செய்துகொண்ட காஜல், மும்பையில் செயற்கை நகைகள் செய்யும் கம்பெனி வைத்து இருக்கிறார். இவரது கணவர் Discern Living என்ற இன்டீரியர் டிசைன் கம்பெனியை நடத்தி வருகிறார்.

Advertisement