நயன்தாரா முதல் ராஷ்மிகா வரை கோலிவுட் நடிகைகளின் லேட்டஸ்ட் சம்பளம். யார் அதிகம் தெரியுமா ?

0
291
actress
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளின் சம்பளம் குறித்த விவரம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பொதுவாகவே நடிகைகளின் சம்பளம் ஆனது ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து தான் நிர்ணயிக்கப்படும். மேலும், சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகைகள் பலர் கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள். அந்த வகையில் எந்தந்த நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள்? என்ற பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது.

-விளம்பரம்-
rashmika

ராஷ்மிகா மந்தனா:

தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பாடல் பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். ராஷ்மிகா ஒரு படத்திற்கு 3 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : மிஸ் இந்தியா 2022 போட்டியில் விலகிய நெஞ்சுக்கு நீதி பட நடிகை – காரணம் இது தான் (என்னப்பா இவங்க இப்படி ஒரு மாடர்ன் பேர்வழியா)

பூஜா ஹெக்டே:

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ படம் மூலம் தான் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்து இருந்தார். மேலும், பீஸ்ட் படத்தின் பாடல், டான்ஸ் மூலமாகவே பூஜா ஹெக்டே பயங்கர பாப்புலராகி விட்டார் என்று சொல்லலாம். இதனைத் தொடர்ந்து பூஜா ஹெக்டே பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பூஜா ஒரு படத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்குகிறார்.

-விளம்பரம்-
pooja

தமன்னா :

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக திகழ்பவர் தமன்னா. இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களிலும் கலக்கி வருகிறார். அப்போது பார்த்தது போலவே இப்போதும் தமன்னா சிலிம்மான தோற்றத்தில் தான் இருக்கிறார். சமீப காலமாக இவருக்கு தமிழில் வரவேற்புகள் குறைந்தாலும் இந்தி, தெலுங்கில் இவருக்கு மார்க்கெட் குறையவில்லை என்று சொல்லலாம். தற்போது தமன்னா ஒரு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

tamanna

ரகுல் ப்ரீத் சிங்:

தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக நடிகை ரகுல் பிரித் சிங் திகழ்ந்து வருகிறார். இவர் தன்னுடைய 18 வயதிலேயே மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி இருந்தார். அதற்குப் பின்னர் அவர் சினிமாத் துறையில் படங்களில் நடிக்க தொடங்கினார். பின் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத் ஒரு படத்திற்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை சம்பளம் பெறுகிறார்

காஜல் அகர்வால்:

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் இருந்தவர் காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது ஓய்வில் இருக்கும் காஜல் விரைவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. காஜல் அகர்வால் ஒரு படத்திற்கு ரூ.3 கோடி சம்பளமாக பெறுகிறார்.

samantha

சமந்தா:

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். சமந்தா ஒரு படத்திற்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

nayanthara

நயன்தாரா:

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் நயன்தாரா. சமீபகாலமாகவே இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகின்றது. சமீபத்தில் நயன், விக்கி இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். நயன்தாரா ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்.

Advertisement