கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி நயனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்கி. அரை மணி நேரத்தில் 50 ஆயிரம் லைக்ஸ்.

0
49846
Naynathara
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் தம்பதிகள் இருந்து வந்தாலும், தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து பலரும் புகைந்து வருகின்றனர்.ஆனால் இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர்ச்சுற்றிக் கொண்டும், நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவருவதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதே போல என்ன தான் பிஸியாக இருந்தாலும் தனது காதலருடன் தனது நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறக்காமல் இருந்து வருகிறார் நயன். அதே போல நயன்தாராவும் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடம் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் நடிகை நயன்தாரா தனது பிறந்தநாளை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினர். அந்த புகைப்படங்களும் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவியது.

இதையும் பாருங்க : இதனால் தான் திருமணத்தையே ரத்து செய்து விட்டேன்- ராஷ்மிகா மந்தனா.

- Advertisement -

நடிகை நயன்தாரா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்க இருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்காக நடிகை நயன் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. அதே போல கடந்த சில வாரமாக நடிகை நயன் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கோவில் கோவிலாக சுற்றி வந்தார். இந்த நிலையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடிகை நயன் தனது காதலருடன் கொண்டாடியுள்ளார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து, நயன்தாராவுடன் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவனின் தோலில் சாய்ந்தபடி மிகவும் ரொமான்டிக் போசை கொடுத்துள்ளார் நயன். இந்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பதிவிட்ட அரை மணி நேரத்தில் 50 ஆயிரம் லைக்சுகளுக்கு மேல் கடந்து சென்றுள்ளது. வழக்கம் போல இந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement