இதனால் தான் திருமணத்தையே ரத்து செய்து விட்டேன்- ராஷ்மிகா மந்தனா.

0
41262
rashmika-mandanna
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முன்னாள் காதலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்று மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. “இன்கேம் இன்கேம் காவாலி” என்ற ஒரு பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதோடு இந்த படத்தில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி உடன் இணைந்து நடித்தார்.

-விளம்பரம்-
Image result for rashmika mandanna rashith shetty engagement

- Advertisement -

மேலும், தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர். தற்போது தெலுங்கில் இரண்டு படம், கன்னடத்தில் இரண்டு படம் என்று பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவிலும் கால் பதிக்க உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் பிரபல கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரு படத்தின் ஷூட்டிங் சமயத்தில் தான் காதலில் விழுந்தார்கள். இவர்கள் இருவரும் 2017ஆம் ஆண்டு திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள்.

இதையும் பாருங்க : கடற்கரையில் படு கிளாமரான உடையில் நடிகை கார்த்திகா நாயர். வைரலாகும் புகைப்படம்.

ஆனால், இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்று தெரியவில்லை 2018 ஆம் ஆண்டிலேயே பிரிந்து விட்டனர். சமீபத்தில் திருமணம் நின்று போனதற்கான கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ரக்‌ஷித் ஷெட்டியுடன் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. எனக்கு வரப்போகிற கணவர் சினிமா துறையில் இல்லாதவராக இருக்க வேண்டும் என்று தான் நான் ஆசைப்பட்டேன். ஆனால், ரக்‌ஷித் சினிமா துறையை சார்ந்தவராக இருந்தாலும் வித்தியாசமாக இருந்தார். அவர் மீது எனக்கு இருந்த காதல் காரணமாக அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தோன்.

-விளம்பரம்-
Image result for rashmika mandanna engagement

நாங்கள் இருவரும் தொழில் ரீதியாக பெயர் வாங்க வேண்டும் என்றால் திருமணத்துக்கு 2 ஆண்டுகள் காத்து இருக்கலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் 2 ஆண்டுகள் முடிந்தபிறகும் தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகம் வந்ததால் திருமணத்திற்க்கு என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. ஒருவேளை நான் திருமணம் செய்தால் தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்துவதுபோல் ஆகி விடும். எனவே அவர்களுக்கு தொல்லை கொடுக்க கூடாது என்று திருமணத்தையே ரத்து செய்து விட்டேன் என்று கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

Advertisement